Masjidhul Ihsaan - Coimbatore

ஈமானை புதுப்பிப்போம்-பகுதி 1..!!



முஸ்லிம்களாக நம்மை பறைசாற்றிக்கொள்ளும் நாம் நமது வாழ்வியல் சார்ந்த அணைத்து விவகாரங்களையும் இஸ்லாமிய வழிகாட்டுதல்களைக் கொண்டு நிறைவேற்றுபவர்களாக இருக்க வேண்டிய அவசியம் குறித்தும், நமது ஈமானின் விதங்கள் மற்றும் அதன் குணங்கள், ஈமானை புதுப்பித்திட வேண்டிய அவசியம் குறித்தும் விளக்கிடும் ஜுமுஆ சிறப்புரையின் முதல் பகுதி.

உரை: மௌலவி. முஹம்மது இஸ்மாயில் இம்தாதி

நாள்: ஜனவரி 19, 2018

@ மஸ்ஜிதுல் இஹ்ஸான், கோவை

இந்த உரையினை கேட்கவும் பதிவிறக்கம் செய்திடவும் கீழுள்ள சுட்டியை சொடுக்கவும்...

https://drive.google.com/file/d/1iC1OpM9bF01bhuavjXw5Or3k23QnGfge


நால்வகை வாழ்க்கை..!!



இவ்வுலகில் வாழும் மனிதன் தனது வாழ்கையை எவ்வாறு அமைத்துக்கொள்ள வேண்டும் என்பதை இறைநெறி தெளிவாக விளக்கியுள்ள நிலையில், மனிதன் தனது வாழ்கையை எவ்வாறு அமைத்துக்கொள்கிறான் என்பதையும் அவ்வாறு அமைந்திடும் வாழ்கையின் தன்மை குறித்து திருக்குர்ஆன் எவ்வாறான விமர்சனங்களை முன்வைக்கிறது என்பதனை விளக்கிடும் ஜுமுஆ சிறப்புரை.

உரை: மௌலவி. முஹம்மது இஸ்மாயில் இம்தாதி

நாள்: ஜனவரி 12, 2018

@ மஸ்ஜிதுல் இஹ்ஸான், கோவை

இந்த உரையினை கேட்கவும் பதிவிறக்கம் செய்திடவும் கீழுள்ள சுட்டியை சொடுக்கவும்...

https://drive.google.com/file/d/1cLld4N8dCUpRwXjMZIM7OSb49vxgzxeI


ஷரியத் பாதுகாப்பில் நம் பங்கு..!!



மலைப்பாம்பு எப்படி தன்னை விட பெரிய மிருகத்தைகூட சுற்றிவளைத்து விழுங்கிடும் பாணியில் இன்று இந்தியா போன்ற நாடுகளின் அரசுகள் முஸ்லிம்களின் வாழ்வியலுடன் கலந்துள்ள ஷரியத் சார்ந்த வழிமுறைகள் மற்றும் உரிமைகளை பறிக்கும் வண்ணம் சட்டங்கள் மற்றும் அடக்குமுறைகளை சமீபமாக ஏவிவருகிறது.

இந்திய முஸ்லிம்களாக இருந்துவரும் நாம் இஸ்லாமிய சட்டவியல் திட்டமான ஷரியத்தை நமது வாழ்வில் சில நேரங்களில் மட்டுமே பின்பற்றிவருகிறோம். இந்நிலையில், நமது வாழ்கையின் அணைத்து பரிமாணத்திலும் இஸ்லாமிய ஷரியத்தை ஒட்டிய நடைமுறையை மேற்கொள்வதும் அதன்மூலம் உலக மக்களுக்கு சிறந்த உதாரணங்களாக விளங்குவதுமே முஸ்லிம்களாகிய நமது கடமை என உணர்த்திடும் ஜுமுஆ சிறப்புரை.

மஸ்ஜிதுல் இஹ்ஸான் @ கோவை

நாள்: ஜனவரி 5, 2018

உரை: மௌலவி முஹம்மது இஸ்மாயில் இம்தாதி

இந்த உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்

https://drive.google.com/file/d/1EczvfdpgIqSSpXjX12Bz8kKiGsuhuAlk

முத்தலாக் தண்டனைச் சட்டம்..!!


இந்திய நாடாளுமன்றத்தில் ஆளும் பஜாக அரசு முஸ்லிம் பெண்களை முத்தலாகில் இருந்து காத்திடுமாறு உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் அவசர கதியில் நான்கே மாதத்தில் ஒரு சட்ட மசோதாவை தாக்கல் செய்து அதனை நிறைவேற்றியும் உள்ளது.

இந்த மசோதாவின் மூலம் மத்திய அரசு முஸ்லிம்களை அவர்களது மத சுதந்திரத்தின் அடிப்படையில் வாழ்வியலை அமைத்துக்கொள்வதில் இருந்து மாற்றி அவர்களை பொது குடும்பவியல் சட்டத்தின் பாதையில் மடை மாற்றிடும் திட்டத்தின் முன்னோட்டமாகவே இந்த சட்டத்தை கொண்டு வந்திருக்கிறது.

இதே உச்ச நீதிமன்றம் பாபர் மஸ்ஜித் வழக்கில் வழங்கிய தீர்ப்பை குறித்து இவர்கள் கூறுகையில் எங்களது மத நபிக்கைக்கு எதிரான எந்த தீர்ப்பையும் நாங்கள் ஏற்றுகொள்ள மாட்டோம் என்று கூறியவர்கள் இப்போது முஸ்லிம் பெண்களுக்கான நீதி வழங்கிட சட்டம் வரையறை மேற்கொள்ளலாம் என்ற உச்சாநீதிமன்ற ஆலோசனையை மட்டும் செயல்படுத்திட துடிப்பது அதன் ரெட்டை நிலையை தெளிவாக காட்டுகிறது. 

இதனினும் மேலாக குடும்பவியல் விவகாரங்களின் அடிப்படையில் இதற்கு சட்டம் இயற்றமால் இதனை குற்றவியல் சட்டத்தின் அடிப்படையில் சிறை தண்டனை என கூறியிருப்பதன் மூலம் இந்திய முஸ்லிம் பெண்களின் வாழ்வினை மேலும் குழப்பத்தில் ஆழ்த்தியிருக்கிறது இந்த எதேச்சாதிகார அரசு.

இந்த சட்டத்தை இந்திய முஸ்லிம்கள் எவ்வாறு எதிர்கொள்வது, இதற்கான சுய விழிப்புணர்வை எவ்வாறு பெறுவது என்பதனை விளக்கிடும் ஜுமுஆ சிறப்புரை.

மஸ்ஜிதுல் இஹ்ஸான் @ கோவை

நாள்: டிசம்பர் 29, 2017

உரை: மௌலவி முஹம்மது இஸ்மாயில் இம்தாதி

இந்த உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்



உயிரோட்டமான சாட்சிகள்..!!


இந்திய அளவில் மட்டுமின்றி உலகம் முழுவதும் முஸ்லிம்கள் தங்களது சுதந்திரத்தையும் உரிமைகளையும் நடைமுறைப்படுத்த முடியாத அளவிற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் அழுத்தங்களும் ஒடுக்குமுறைகளும் ஏவப்படும் சூழல் நிலவுகிறது.

இந்த இக்கட்டான வேலையில் முஸ்லிம் உம்மத்தின் ஒவ்வோர் அங்கத்தவரும் குர்ஆனின் அச்சில் நபியவர்களின் வழிகாட்டலின் அடிப்படையில் உலக மக்களுக்கு இஸ்லாமிய வாழ்வியல் நெறியின் உயிருள்ள சாட்சிகளாக தங்களை மாற்றிகொள்ளவேண்டிய அவசியத்தை உணர்த்திடும் ஜுமுஆ சிறப்புரை.

மஸ்ஜிதுல் இஹ்ஸான் @ கோவை

நாள்: டிசம்பர் 22, 2017

உரை: மௌலவி முஹம்மது இஸ்மாயில் இம்தாதி

இந்த உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்

https://drive.google.com/file/d/1fKLDViJIxBSG_Xv7LnLRMQt34z1eihp2


மரணத்தின் செய்தி..!!



நமது குடும்பத்திலோ, உறவினரிலோ அல்லது நண்பர் வட்டத்தில் யாரேனும் ஒருவரது மரணத்தின்போது நமது வாழ்வில் ஏதேனும் ஒரு வகையான தாக்காதை ஏற்படுத்திவிடும். அவ்வகையான தாக்கங்கள் நம் வாழ்வின் அடிப்படையே மாற்றிவிடக்கூடியதாக அமைந்துவிடும்.

மரணத்தை தொடர்ந்து இறை நம்பிக்கையாளர்களாய் நமது செயல்பாடுகள் எவ்வாறு அமைந்திட வேண்டும் என்பதையும், மரணத்தைக் குறித்தான இஸ்லாமிய கருத்தோட்டங்களையும் அது மனிதகுலத்திற்கு வழங்கிடும் செய்தியினை விளக்கிடும் ஜுமுஆ சிறப்புரை.

மஸ்ஜிதுல் இஹ்ஸான் @ கோவை

நாள்: டிசம்பர் 15, 2017

உரை: மௌலவி முஹம்மது இஸ்மாயில் இம்தாதி

இந்த உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும் 


மக்களோடு நாம் மக்களுக்காக நாம்..!!


நபிகளார் (ஸல்) அவர்கள் சாமானிய முஸ்லிம்களின் வாழ்வில் எங்கே இருக்கிறார் என யோசித்தால் அது தொழுகை, நோன்பு, ஜகாத் போன்ற வணக்க வழிபாடுகளுடன் ஒன்றார கலந்திருப்பதை பார்க்கலாம். இஸ்லாமிய அடிப்படையில் கூறவேண்டும் எனில் வாழ்வியலின் ஒவ்வொரு பரிமாணத்திலும் நபிளார் (ஸல்) அவர்களின் பிரதியாகவே ஓர் முஸ்லிம் தன்னை வார்த்தெடுக்க வேண்டும்.

முஸ்லிம்களாகிய நமது வாழ்வில் வெறுமனே வணக்க-வழிபாடு என்ற பரிமாணத்தில் மட்டுமல்லாது மக்கள் நலனிலும் பங்கெடுத்திடவும் நம் சக மனிதர்களுக்கு மத்தியில் நபிகளாரின் வாழ்வியலை விளக்கிடும் வகையில் நமது வாழ்வியலை மாற்றியமைத்திட வேண்டிய தேவையை விளக்கிடும் ஜுமுஆ சிறப்புரை.     

மஸ்ஜிதுல் இஹ்ஸான் @ கோவை

நாள்: டிசம்பர் 8, 2017

உரை: மௌலவி முஹம்மது இஸ்மாயில் இம்தாதி

இந்த உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்



மௌலூதும் இஸ்லாமிய ஆன்மீகமும்..!!



ஆண்டுதோறும் ரபிய்யுல் அவ்வல் மாதம் நபிகளாரின் மீது புகழ்மாலை பாடுவதனால் தங்களின் நபிநேசத்தை வெளிப்படுத்துவதாகவும் அதன் மூலம் மறுமையில் பயன் கிடைக்கும் எனும் நம்பிக்கையில் இஸ்லாமிய ஏகத்துவ கோட்பாட்டின் அடிப்படையினையே பலகீனப் படுத்தும் விதமாக ஒருசாரார் நடந்துகொள்கின்றனர். தௌஹீத் சிந்தனைப்போக்கு கொண்டு இந்த மௌலூது கலாச்சாரத்தை கடுமையாக எதிர்க்கிறோம் எனும் பெயரில் ஒருவரை ஒருவர் வெறுப்பேற்றும் செயலின் உச்சமாக பள்ளியின் பாங்கு சொல்ல பயன்படுத்தப்படும் ஒலிபெருக்கியில் மற்ற நேரங்களைவிட அதிகமான சப்தத்துடன் இந்த மௌலூது ஓதுவது ஆங்காங்கே நடந்துவருகிறது.

இஸ்லாமிய சமூகத்தின் புரையோடிப்போயுள்ள இப்படியான அனாச்சாரங்களை களைவதுடன், இந்த சமூகத்தின் மீது இறைவன் சாட்டியுள்ள கடைமைகளின் அடிப்படையில் மனித மனங்களை வென்றெடுக்கக் கூடியவர்களாய் மாறிட வேண்டிய இன்றியமையாத தேவையை விளக்கிடும் ஜுமுஆ சிறப்புரை.    

மஸ்ஜிதுல் இஹ்ஸான் @ கோவை

நாள்: டிசம்பர் 1, 2017

உரை: மௌலவி முஹம்மது இஸ்மாயில் இம்தாதி

இந்த உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்

வாழ்வில் பிரதிபலிப்பதே நபிநேசத்தின் நோக்கம்..!!



வருடம்தோறும் ரபிய்யுல் அவ்வல் மாதம் நபிகளாரின் மீது புகழ்மாலை பாடுவதனால் தங்களின் நபிநேசத்தை வெளிப்படுத்துவதாகக் கருதிக்கொண்டு சாமானிய மக்களின் சிந்தனைகளையும் இஸ்லாமியா வாழ்வியலில் இருந்து திசை மாற்றுவதோடு. இப்படி புகழ்மாலை பாடுவதே நபிகளார் மீது முஸ்லிம்களின் தலையாய கடமையாய் முன்னிறுத்துகின்றனர்.

ஆனால் நபிகளாரின் மீதான நேசத்தை அவரது தோழர்கள் எவ்வாறு வெளிப்படுத்தினார்கள் என்பதை நாம் கவனிக்க மறந்துவிடுகிறோம். நபிகளாரின் தோழர்கள் அவரது வழிகாட்டல்களையும் வழிமுறைகளையும் தங்களது வாழ்வில் செயல்படுத்துவதே அவரின்மீது கொண்ட நேசத்தின் வெளிபாடாக கருதினர்.

உலக மக்களுக்கு சான்றுபகரும் பொறுப்பை சுமந்துள்ள முஸ்லிம்கள் தங்களது வாழ்வியலில் நபிகளார் அவர்களை முழுமையாக பிரதிபலிக்கும் வகையில் அமைத்திட வேண்டும் என்பதை விளக்கிடும் ஜுமுஆ சிறப்புரை.

மஸ்ஜிதுல் இஹ்ஸான் @ கோவை

நாள்: நவம்பர் 24, 2017

உரை: மௌலவி முஹம்மது இஸ்மாயில் இம்தாதி

இந்த உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்



கலப்படமில்லா இஸ்லாமிய சமூகம் - Part 2..!!


கடந்த வாரம் உணவுப்பொருட்களில் கலப்படம் காரணமாக நாம் அதனை சரி செய்திட மேற்கொள்ளும் விழிப்புணர்வும் சீர்திருத்தம் பெற்றிட பெரும் முயற்சிகள் மேற்கொகிறோம். அதேபோல் நமது வாழ்வின் அணைத்து துறைகளிலும் இறைநெறி இன்றியமையாத அங்கம் வகிக்கவேண்டிய நிலை இல்லாமல் மனோயிச்சையின் அடிப்படையிலும், அனாச்சாரங்களின் அடிப்படையிலும் நமது வாழ்வியலை அமைக்கும்போது அது மாசடைகிறது.

இப்படிப்பட்ட சூழலில் முஸ்லிம்களின் மீது இறைவன் சுமத்தியுள்ள “முன்மாதிரி சமூகம்” என்ற அந்தஸ்தின் அடிப்படையிலும், நாம் ஏற்றிருக்கும் கலிமாவின் அடிப்படையில் “சாட்சி பகரும்” பொறுப்பையும் பிற சமூகத்தவரிடம் எவ்வாறு கொண்டு சேர்க்கப்போகிறோம் என்பதை நாம் சிந்திக்க வேண்டிய கட்டாய நிலையில் இன்றைய இஸ்லாமிய சமூகம் இருக்கிறது. அல்லாஹ் நம் சமூகத்தின் மீது சுமத்தியுள்ள இந்த “சாட்சி பகரும்” பணியை செய்திட நாம் முதலில் நம் சமூகத்தில் புகுத்தப்பட்டுள்ள கசடுகளையும் கலப்படங்களையும் களைந்திட வேண்டிய அவசியத்தையும், இறைமார்க்கம் பிற சமூக மக்களிடமும் சென்றடையக்கூடிய  சிறந்த முன்மாதிரிகளாக நாம் மாறிட வேண்டும் என்பதை விளக்கிடும் ஜுமுஆ சிறப்புரை.

மஸ்ஜிதுல் இஹ்ஸான் @ கோவை

நாள்: நவம்பர் 17, 2017

உரை: மௌலவி முஹம்மது இஸ்மாயில் இம்தாதி

இந்த உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்

https://drive.google.com/file/d/1269xl7IgPz7VqtbpzFwrD88ld4XAB9Gj


கலப்படமில்லா இஸ்லாமிய சமூகம்..!!


நாம் அன்றாடம் உபயோகிக்கும் பொருளில் ஏதேனும் கலப்படம் காணப்பட்டாலோ அதன் தரத்தில் குறைபாடுகள் கண்டறியப்பட்டாலோ உணர்வு ரீதியாக மட்டுமல்லாமல் சிந்தனை ரீதியாகவும் நாம் அதனைக்குறித்து விளக்கம் பெற்றிடக்கூடிய  சிந்தனை ஓட்டமும், அது குறித்த விழிப்புணர்வும் பெற்றிட பெரும் முயற்சிகள் மேற்கொகிறோம்.

ஆனால், முஸ்லிம் தனி நபர் மற்றும் சமூகத்தை ஆட்க்கொண்டுள்ள கலப்படங்களை பற்றிய சிந்தனையை நாம் மேற்கொள்ள முயற்சிப்பதில்லை. முஸ்லிம் சமூகம் இன்று சந்தித்து வரும் சவால்கள் நிறைந்த சிக்கலான பிரச்சினைகளின் அடிப்படைக் காரணியாக இருப்பது இந்த கலப்படங்களே. இந்த கலப்படங்கள் எவ்வாறு சமூகத்தினை பாதிக்கிறது அதனை எவ்வாறு களைவது குறித்து விளக்கிடும் ஜுமுஆ சிறப்புரை.

மஸ்ஜிதுல் இஹ்ஸான் @ கோவை

நாள்: நவம்பர் 10, 2017

உரை: மௌலவி முஹம்மது இஸ்மாயில் இம்தாதி

இந்த உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்