Masjidhul Ihsaan - Coimbatore

சமூகத்தின் தற்கால நோய்..!!


“(நபியே!) நீர் கூறும்: “உங்களுக்கு மேலிருந்தோ, உங்களின் கால்களுக்குக் கீழேயிருந்தோ ஏதேனுமொரு வேதனையை உங்கள்மீது இறக்கவும், அல்லது உங்களைப் பல்வேறு கூட்டங்களாகப் பிரித்து, உங்களில் ஒரு கூட்டத்தார் கொடுக்கும் துன்பத்தை மற்றொரு கூட்டத்தார் சுவைக்கும்படிச் செய்யவும் அவன் ஆற்றலுள்ளவன்.” பாருங்கள்! அவர்கள் உண்மையை உணரும் பொருட்டு நம் சான்றுகளை எவ்வாறெல்லாம் மீண்டும் மீண்டும் அவர்கள் முன் எடுத்து வைத்துக் கொண்டிருக்கிறோம்.”       -- அல் குர்ஆன் (6:65)

வினையும் - எதிர்வினையும்..!!


மனிதன் தனது வாழ்நாளில் நிகழ்த்தும் வினைகளுக்கும் அதன் விளைவாக விளையும் எதிர்வினைகளும் ஒன்றோடொன்று தொடர்புடையதாகவே இருக்கிறன. ஓர் மாணிதன் புரியும் வினை நன்மையான ஒன்றாக இருப்பின் அது அவனுக்கு நல்ல எதிர்வினையை அளிக்கிறது. அதனைப்போலவே அவன் புரியும் தீவினைகளுக்கும் மோசமான எதிர்வினைகளை அளிக்கும்.

இஸ்லாமிய அரசாட்சியின் முன்னுதாரணம்..!!


இன்றைய நாவீனகால அரசியல் சூழலிலும் மாற்றுக்கருத்து கொண்டுள்ளவர்களும் எதிர்பார்த்து இருக்கும் உதாரண அரசாட்சி ஹள்ரத் உமர் (ரலி) அவர்களின் ஆட்சியே.

இஸ்லாமிய ஆட்சிமுறையின் பிரதிபலிப்பாகவும் அகிலத்தின் ஆட்சியாளர்கள் அனைவருக்கும் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கிய மக்கள் நலம் பேணும், நீதியை நிலைநிறுத்தும், உரிமைகளை பாதுகாக்கும், மத சுதந்திரம் போற்றும் ஆட்சியினை பறந்து விரிந்து கிடந்த நிலப்பரப்பு முழுவதும் வழங்கியவர் ஹள்ரத் உமர் (ரலி) அவர்கள்.

ஹள்ரத் உமர் (ரலி) அவர்களது ஆட்சியினை எடுத்திக்காட்டாக கொண்டு இன்றைய முஸ்லிம்களின் அரசியல் குறிக்கோள் மற்றும் இஸ்லாமிய ஆட்சிமுறையை நிலைநிறுத்த வேண்டிய இன்றியமையாமையையும் விளக்கும் ஜுமுஅ சிறப்புரை.

ஜுமுஅ சிறப்புரை @ மஸ்ஜிதுல் இஹ்ஸான், கோவை

நாள்: ஜனவரி 15, 2016

உரை: மௌலவி முஹம்மது இஸ்மாயில் இம்தாதி

இந்த உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்அரசாட்சி எனும் இறைகட்டளை.!!


“திண்ணமாகத் தனக்கு உதவி செய்வோருக்கு அல்லாஹ் உதவி செய்வான். நிச்சயம் அல்லாஹ் வலிமை வாய்ந்தவனும் யாவற்றையும் மிகைத்தவனுமாவான். அவர்கள் எத்தகையவர்களெனில், நாம் அவர்களுக்கு பூமியில் ஆட்சியதிகாரத்தை வழங்கினால் அவர்கள் தொழுகையை நிலை நிறுத்துவார்கள்; ஜகாத் வழங்குவார்கள். மேலும், நன்மை புரியுமாறு ஏவுவார்கள்; தீமையிலிருந்து தடுப்பார்கள். மேலும், எல்லா விவகாரங்களின் முடிவும் அல்லாஹ்வின் கையில் உள்ளது.” – அல் குர்ஆன் (22:40-41)

மேலுள்ள இறைவசனங்கள் இறை நம்பிக்கயாளர்களுக்கு ஆட்சியதிகாரம் வழங்கப்படும்போது அவர்கள் எவ்வாறான செயல்களை செய்வார்கள் என்பதனை எடுத்துரைக்கிறது. இறையடியார்களிடம் பொறுப்பு சாட்டப்ப்படும்போது அவர்களது செயல் இறைவனையும் அவனது வழிகாட்டலின்படியும் அமைந்திருக்கும் என்பதையும் விளக்கும் ஜுமுஅ சிறப்புரை.

ஜுமுஅ சிறப்புரை @ மஸ்ஜிதுல் இஹ்ஸான், கோவை

நாள்: ஜனவரி 8, 2016

உரை: மௌலவி முஹம்மது இஸ்மாயில் இம்தாதி

இந்த உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்இந்திய முஸ்லிம்களின் கொள்கைப்பிடிப்பு..!!


فَاُلۡقِىَ السَّحَرَةُ سُجَّدًا قَالُوۡۤا اٰمَنَّا بِرَبِّ هٰرُوۡنَ وَمُوۡسٰى  ﴿20:70﴾ قَالَ اٰمَنۡتُمۡ لَهٗ قَبۡلَ اَنۡ اٰذَنَ لَـكُمۡؕ اِنَّهٗ لَـكَبِيۡرُكُمُ الَّذِىۡ عَلَّمَكُمُ السِّحۡرَۚ فَلَاُقَطِّعَنَّ اَيۡدِيَكُمۡ وَاَرۡجُلَكُمۡ مِّنۡ خِلَافٍ وَّلَاُصَلِّبَـنَّكُمۡ فِىۡ جُذُوۡعِ النَّخۡلِ وَلَـتَعۡلَمُنَّ اَيُّنَاۤ اَشَدُّ عَذَابًا وَّاَبۡقٰى ﴿20:71﴾ قَالُوۡا لَنۡ نُّؤۡثِرَكَ عَلٰى مَا جَآءَنَا مِنَ الۡبَيِّنٰتِ وَالَّذِىۡ فَطَرَنَا فَاقۡضِ مَاۤ اَنۡتَ قَاضٍ ؕ اِنَّمَا تَقۡضِىۡ هٰذِهِ الۡحَيٰوةَ الدُّنۡيَا ؕ ﴿20:72﴾ اِنَّاۤ اٰمَنَّا بِرَبِّنَا لِيَـغۡفِرَ لَـنَا خَطٰيٰنَا وَمَاۤ اَكۡرَهۡتَـنَا عَلَيۡهِ مِنَ السِّحۡرِؕ وَاللّٰهُ خَيۡرٌ وَّاَبۡقٰى

வலதுசாரி ஹிந்துத்துவ சிந்தனை கொண்ட பாசிஸ்ட்கள் ஆட்சிக்கட்டிலில் அமர்த்தப்பட்டதிலிருது நம் நாட்டின் மதச்சார்பற்ற கொள்கைகள் காற்றில்விடப்பட்டு சிறுபான்மை மதத்தவர் மட்டுமில்லாமல், தலித்துகள், மற்றும் பிற்படுத்தப்பட்டோர் மீது அடக்குமுறைகளும் கொலைவெறித்தாக்குதல்களும் நாள்தோறும் அரங்கேறிக்கொண்டிருக்கிறது.