Masjidhul Ihsaan - Coimbatore

தண்ணீர் சேமிப்பு..!!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
நமது பள்ளியில் தொழுகைக்காக ஒழுசெய்ய மட்டும் வாரம் சுமார் 10,000 லிட்டர் தண்ணீர் பயன்படுத்தபடுகிறது
கோவையில் 100 பள்ளிகளுக்கு மேல் உள்ளது சுமார் ஒருநாளைக்கு 10 லட்சம் லிட்டர் தண்ணீர் கோவை நகர் பகுதிகளில் ஒழுசெய்யபட்ட தண்ணீர் சாக்கடையில் கலந்து கொண்டு இருக்கிறது
தற்போதய வறட்சியால் நகர் பகுதி பள்ளிவாசல்களில் ஒழு செய்ய கூட தண்ணீர் இல்லமால் தண்ணீர் வெளியே விலைக்கு வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனால் பள்ளி நிர்வாகத்தினரும், பொது மக்களும் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்நிலை நம் பகுதிகளிலும் ஏற்பாடாமல் இருக்கவும், கோடை கால வறட்சியை சமாளிக்கவும், நாம் கோவை மாநகரின் நீர் ஆதாரத்தை பாதுகாக்கவும், நாம் முன்னேற்பாடுகளை செய்ய வேண்டியுள்ளது.
அந்த வகையில், நம் பள்ளியில் ஒழுசெய்யும் தண்ணீரை பூமிக்கு அடியில் செலுத்துவதால் நம் பகுதியின் நீர்மட்டம் உயரும். நம் பள்ளிவாசலில் இவ்வகையில் 5 அடி விட்டதில், 12 அடி ஆழத்தில் இரண்டு பெரிய குழிகள் தோண்டப்பட்டு அதில் நீரை சுத்தம் செய்ய (RAIN WATER HARVESTING SYSTEM) RWH சுத்திகரிப்பு முறையில் தேவையான கற்கள், இன்னும் அதற்க்கு தேவையான பொருள்களை இட்டு வேலை நடைபெற்று வருகின்து. இதனால் நம் சுற்றுவட்டார பகுதிகள் முழுவதும் நிலத்தடி நீர் மட்டம் உயரும்.
கோவையில் முதல் முறையாக ஒழு செய்யும் தண்ணீரை சேகரிக்கும் முறை நம் பள்ளியில் துவங்கி உள்ளோம்.
இறைவனின் அருட்கொடையான நீரை சாக்கடையில் கலந்து விரயம் ஆகாமல் மீண்டும் அந்த நீரை மக்களின் பயன்பாடிற்க்கும், பள்ளியின் பயன்பாடிற்க்கும் தூய்மையாக வழங்கும் முயற்சியில் நமது ஜமாஅத் முயற்சி எடுத்துள்ளது.
அடுத்தக்கட்ட முயற்சியாக கோவை கரும்புக்கடை மஸ்ஜிதுல் ஹுதா, ஒப்பணகார வீதி அத்தார் ஜமாஅத் பள்ளிவாசல், RS புரம் குர்ரதுல் அயன் பள்ளிவாசல்களில் தண்ணீர் சேகரிப்பு தொட்டி அமைக்கும் முயற்சி விரைவில் ஆரம்பிக்கப்பட உள்ளது
இந்த தண்ணீர் சேகரிப்பு முறை கோவையில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


இப்படிக்கு,

மஸ்ஜிதுல் இஹஸான் நிர்வாகம்
தினமலர் வலைதளத்தில் ஒளிபரப்பப்பட்ட காணொளி...
http://www.dinamalar.com/video_main.asp?news_id=92367&cat=32

பாரூக் கொலையும் – சமூகத்தின் செயல்பாடுகளும்..!!


கோவையில் மார்ச் 16, 2017 அன்று பாரூக் என்ற இளைஞர் சமூக விரோதிகள் சிலரால் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார். அதனைத்தொடர்ந்து பல்வேறு கருத்துகளும் வதந்திகளும் பரப்பபட்டது.

பாரூக் கடந்த சில வருடங்களாக கடவுள் மறுப்பு சிந்தனைகொண்டு இஸ்லமிய மார்க்கத்தையும் அதன் செயல்பாடுகளையும் கடுமையாக விமர்சித்ததாகவும் அதனாலேயே அவரது நண்பர்களாலேயே கொலை செய்யப்பட்டார் எனும் கருத்துகளும் பரப்பபட்டது.

இந்த நிலையில், முஸ்லிம் சமூகம் இவ்வாறான பதட்டமான சூழலில் எவ்வாறு ஓர் குழப்பமான மனநிலைக்கு தள்ளப்படுவது நெடுங்காலமாய் தொடர்ந்துகொண்டேயிருக்கிறது. அந்த சூழலை எதிர்கொள்ள தேவையான நிதானம் மற்றும் இஸ்லாமிய வழிகாட்டுதல்களின் படி அந்த நெருக்கடியை சமாளிப்பதற்கு முஸ்லிம் சமூகமும் அதன் தலைமையும் தயக்கம் காட்டிவருகிறது. இந்நிலையின் இஸ்லாமிய வழிகாட்டுதல்களின் அடிப்படையில் எவ்வாறான செயல்பாடுகளை முஸ்லிம் சமூகம் கூட்டாக மேற்கொள்வேண்டும் என்பதைக் குறித்து விளக்கும் ஜுமுஆ சிறப்புரை.

மஸ்ஜிதுல் இஹ்ஸான் @ கோவை

நாள்: மார்ச் 24, 2017

உரை: மௌலவி முஹம்மது இஸ்மாயில் இம்தாதி

இந்த உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்மனோஇச்சைப்படி வாழ்வும் - கடிவாளமற்ற குதிரையும்..!!


மனிதனுக்கு வழங்கப்பட்ட அருட்கொடையில் பெருமதிப்புடையது அவனுக்கு வழங்கப்பட்ட வாழ்நாளேயாகும். அவன் தனது வாழ்நாளை எவ்வாறு பயன்படுத்திகிறான் என்பதைப்பொறுத்தே அவனது மறுமை ஈடேற்றம் அமையும் என்பது இறைநியதி.

மனிதன் இறைவனின் மீது நம்பிக்கை கொண்டவனாகிலும் அல்லது நம்பிக்கையற்றவனாகிலும் அவன் தனது வாழ்நாளை தனது மனோஇச்சைக்கு பணிந்து மனம்போனபோக்கில் வால்வானாகில் அவனது வாழ்வு கடிவாளமற்ற குதிரையின் மீதான பயணம்போல இலக்கில்லாத ஒன்றாக அமைந்துவிடும்.

அப்படி இலக்கின்றி வாழ்வை கடத்துவதை விடுத்து இறை கட்டளைகளை பின்பற்றி அவனது கருணைக்கு உகந்தவனாக மனிதன் தனது வாழ்நாளை பயன்படுத்திக்கொள்ள வேண்டிய அவசியம் குறித்து விளக்கும் ஜுமுஆ சிறப்புரையின் முதல் பகுதி.

மஸ்ஜிதுல் இஹ்ஸான் @ கோவை

நாள்: மார்ச் 17, 2017

உரை: மௌலவி முஹம்மது இஸ்மாயில் இம்தாதி

இந்த உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்

https://drive.google.com/file/d/0B7o0wyRQOYOeZG9neXh4NGNGLTA


நீரின்றி அமையாது உலகு..!!இறைவனது படைப்புகள் அனைத்திலும் மிக வளமிக்கதும், உயரினங்கள் வாழக்கூடிய சூழல் மிக்கதுமான இந்த பூமிப்பந்து இந்த அண்டவெளியில் தனித்தன்மை கொண்டதாக படைத்திருப்பதன் மூலமே இயற்கையின் மேல் தனது வல்லமைக்கு சான்றாக அமைத்திருக்கிறான்.

அதிலும், மனிதன் மற்றும் தாவரங்கள் உயிர் வாழத்தேவையான நீரை இறைவன் தேவையை கருது வானிலிருந்து இறக்கிவைப்பதாக கூறுகிறான். இன்றுவரை தனது அறிவியல் அறிவின் மூலம் பல்வேறு படைப்புக்களை மனிதன் படித்திருந்தாலும், அவனால் நீரை இறைவன் தரும் இயற்கை தன்மையில் படைக்க முடியவில்லை.

உலகில் உயிரினங்கள் வாழ்ந்திட இறைவனின் அருட்கொடையில் சிறந்ததாக விளங்கிடும் நீரின் இன்றியமையாத தேவை குறித்தும், மனிதனின் அஜாக்கிரதையால் நீர்வளத்தை மாசுபடுத்துவதுடன் உயிர்ணகளின் இருப்பிற்கு ஆபத்தையும் உண்டாக்கிக்கொண்திருக்கிறான். இறைவன் நீரைக்குரித்தும் அதன் தன்மையைக்குரித்தும் தனது இறுதி வேதத்தில் எவ்வாறான கருத்துக்களை குறிப்பிடுகிறான் என்பதையம் நீரின் இன்றியமையாத தன்மையை உணர்ந்து அதனை பாதுகாப்பதின் அவசியம் குறித்தும் விளக்கும் ஜுமுஆ சிறப்புரை.

மஸ்ஜிதுல் இஹ்ஸான் @ கோவை

நாள்: மார்ச் 10, 2017

உரை: மௌலவி முஹம்மது இஸ்மாயில் இம்தாதி

இந்த உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்

https://drive.google.com/file/d/0B7o0wyRQOYOecEdTWkRYRWFUeHc


கல்வியும் அறியாமையும்..!!


ஒரு மனிதன் ஒரு விஷயத்தைக் குறித்த அறிவு பெற்றிருந்தால் அதன் மீது அளவு கடந்த நம்பிக்கையும் மதிப்பும் வைத்திருப்பான். அதுவே, அதைக்குறித்த அறிவு இல்லாவிடில் அதனை அவமதிப்பதும் அதனை தீவிரமாக எதிர்க்கவும் செய்கிறான். இதனைப்போலவே, இஸ்லாமிய மார்க்கம் குறித்த அறிவின்மையே அதனை எதிர்ப்பவர்களிடம் காணமுடிகிறது.

அறிவைப்பெருதல் என்பது வெறுமனே அதனைக் குறித்த தகவல்களைப்பெருவது மட்டுமல்ல, அதனால் மனித வாழ்வில் ஏற்படும் நன்மை-தீமைகளை ஆராய்ந்து நன்மையானவற்றை மேற்கொள்வதும் அறிவின் ஓர் அங்கமாகும்.

இதனடிப்படையிலேயே, இஸ்லாமிய மார்க்கம் குறித்த அறிவை நமது குழந்தைகளுக்கு கொடும்ப்பது மட்டுமல்லாது, அது கூறும் வாழ்வியல் கோட்பாடுகளை பகுத்து அதனடிப்படையில் வாழ்வினை செலுத்துவதும் அறிவின் பண்புநலன்களில் முக்கியமான ஒன்று என்பதை விளக்கும் ஜுமுஆ சிறப்புரை.

மஸ்ஜிதுல் இஹ்ஸான் @ கோவை

நாள்: மார்ச் 3, 2017

உரை: மௌலவி முஹம்மது இஸ்மாயில் இம்தாதி

இந்த உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்..