Masjidhul Ihsaan - Coimbatore

வாழ்வில் பிரதிபலிப்பதே நபிநேசத்தின் நோக்கம்..!!வருடம்தோறும் ரபிய்யுல் அவ்வல் மாதம் நபிகளாரின் மீது புகழ்மாலை பாடுவதனால் தங்களின் நபிநேசத்தை வெளிப்படுத்துவதாகக் கருதிக்கொண்டு சாமானிய மக்களின் சிந்தனைகளையும் இஸ்லாமியா வாழ்வியலில் இருந்து திசை மாற்றுவதோடு. இப்படி புகழ்மாலை பாடுவதே நபிகளார் மீது முஸ்லிம்களின் தலையாய கடமையாய் முன்னிறுத்துகின்றனர்.

ஆனால் நபிகளாரின் மீதான நேசத்தை அவரது தோழர்கள் எவ்வாறு வெளிப்படுத்தினார்கள் என்பதை நாம் கவனிக்க மறந்துவிடுகிறோம். நபிகளாரின் தோழர்கள் அவரது வழிகாட்டல்களையும் வழிமுறைகளையும் தங்களது வாழ்வில் செயல்படுத்துவதே அவரின்மீது கொண்ட நேசத்தின் வெளிபாடாக கருதினர்.

உலக மக்களுக்கு சான்றுபகரும் பொறுப்பை சுமந்துள்ள முஸ்லிம்கள் தங்களது வாழ்வியலில் நபிகளார் அவர்களை முழுமையாக பிரதிபலிக்கும் வகையில் அமைத்திட வேண்டும் என்பதை விளக்கிடும் ஜுமுஆ சிறப்புரை.

மஸ்ஜிதுல் இஹ்ஸான் @ கோவை

நாள்: நவம்பர் 24, 2017

உரை: மௌலவி முஹம்மது இஸ்மாயில் இம்தாதி

இந்த உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்கலப்படமில்லா இஸ்லாமிய சமூகம் - Part 2..!!


கடந்த வாரம் உணவுப்பொருட்களில் கலப்படம் காரணமாக நாம் அதனை சரி செய்திட மேற்கொள்ளும் விழிப்புணர்வும் சீர்திருத்தம் பெற்றிட பெரும் முயற்சிகள் மேற்கொகிறோம். அதேபோல் நமது வாழ்வின் அணைத்து துறைகளிலும் இறைநெறி இன்றியமையாத அங்கம் வகிக்கவேண்டிய நிலை இல்லாமல் மனோயிச்சையின் அடிப்படையிலும், அனாச்சாரங்களின் அடிப்படையிலும் நமது வாழ்வியலை அமைக்கும்போது அது மாசடைகிறது.

இப்படிப்பட்ட சூழலில் முஸ்லிம்களின் மீது இறைவன் சுமத்தியுள்ள “முன்மாதிரி சமூகம்” என்ற அந்தஸ்தின் அடிப்படையிலும், நாம் ஏற்றிருக்கும் கலிமாவின் அடிப்படையில் “சாட்சி பகரும்” பொறுப்பையும் பிற சமூகத்தவரிடம் எவ்வாறு கொண்டு சேர்க்கப்போகிறோம் என்பதை நாம் சிந்திக்க வேண்டிய கட்டாய நிலையில் இன்றைய இஸ்லாமிய சமூகம் இருக்கிறது. அல்லாஹ் நம் சமூகத்தின் மீது சுமத்தியுள்ள இந்த “சாட்சி பகரும்” பணியை செய்திட நாம் முதலில் நம் சமூகத்தில் புகுத்தப்பட்டுள்ள கசடுகளையும் கலப்படங்களையும் களைந்திட வேண்டிய அவசியத்தையும், இறைமார்க்கம் பிற சமூக மக்களிடமும் சென்றடையக்கூடிய  சிறந்த முன்மாதிரிகளாக நாம் மாறிட வேண்டும் என்பதை விளக்கிடும் ஜுமுஆ சிறப்புரை.

மஸ்ஜிதுல் இஹ்ஸான் @ கோவை

நாள்: நவம்பர் 17, 2017

உரை: மௌலவி முஹம்மது இஸ்மாயில் இம்தாதி

இந்த உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்

https://drive.google.com/file/d/1269xl7IgPz7VqtbpzFwrD88ld4XAB9Gj


கலப்படமில்லா இஸ்லாமிய சமூகம்..!!


நாம் அன்றாடம் உபயோகிக்கும் பொருளில் ஏதேனும் கலப்படம் காணப்பட்டாலோ அதன் தரத்தில் குறைபாடுகள் கண்டறியப்பட்டாலோ உணர்வு ரீதியாக மட்டுமல்லாமல் சிந்தனை ரீதியாகவும் நாம் அதனைக்குறித்து விளக்கம் பெற்றிடக்கூடிய  சிந்தனை ஓட்டமும், அது குறித்த விழிப்புணர்வும் பெற்றிட பெரும் முயற்சிகள் மேற்கொகிறோம்.

ஆனால், முஸ்லிம் தனி நபர் மற்றும் சமூகத்தை ஆட்க்கொண்டுள்ள கலப்படங்களை பற்றிய சிந்தனையை நாம் மேற்கொள்ள முயற்சிப்பதில்லை. முஸ்லிம் சமூகம் இன்று சந்தித்து வரும் சவால்கள் நிறைந்த சிக்கலான பிரச்சினைகளின் அடிப்படைக் காரணியாக இருப்பது இந்த கலப்படங்களே. இந்த கலப்படங்கள் எவ்வாறு சமூகத்தினை பாதிக்கிறது அதனை எவ்வாறு களைவது குறித்து விளக்கிடும் ஜுமுஆ சிறப்புரை.

மஸ்ஜிதுல் இஹ்ஸான் @ கோவை

நாள்: நவம்பர் 10, 2017

உரை: மௌலவி முஹம்மது இஸ்மாயில் இம்தாதி

இந்த உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்


கருத்துச்சுதந்திரம்..!!இன்றைய கால சூழலில் முஸ்லிம் சமூகம் பொதுவில் மற்ற பிரிவினர் மீதான கருத்துகளுக்கு ஆர்ப்பறித்திடும் அதேசமயம், முஸ்லிம் சமூகத்தின்மீதோ அல்லது இஸ்லாத்தின்மீதோ எதிர்கருத்துகள் வரும்போது அதன் தன்மையை உணராது அதனை எதிர்ப்பதும் அன்றாட நிகழாவாக மாறியிருக்கிறது.

இந்த சூழலில் இஸ்லாம் நமக்கு கற்றுதரும் கருத்துச்சுதந்திரம் என்பது மனித உரிமை மட்டுமல்லாது இறைநம்பிக்கை சார்ந்த ஒன்றாகவே இருக்கிறது. இதற்கான எடுத்துக்காட்டுகளாக நபிகளார் அவர்கள் பத்ரு போர்க்களத்தில் தம் சாமானிய தோழர்களில் ஒருவர் கூறிய கருத்திற்கேற்ப கிணற்றை கைப்பற்றியது முதல், தனது விருப்பத்திற்கு மாறாக உஹதில் போர் புரிய சென்றதும், அதனைப்போலவே பல்வேறு தருணங்களில் தனது தோழர்களின் அறிவுரைகளை பெற்றுக்கொண்டதும் நமக்கு படிப்பினையாக அமைந்துள்ளது.

இதனை மனதில்கொண்டு தற்போதைய முஸ்லிம் சமூகம் அது பெரும்பான்மையாக இருந்தாலும் சரி சிறுபான்மையாக இருந்தாலும் சரி மக்களின் கருத்துச்சுதந்திரத்தை நடைமுறைப்படுத்துவதுடன் அதனை பாதுகாப்பதும் அதன்மீதான கடமை என்பதனை விளக்கிடும் ஜுமுஆ சிறப்புரை. 

மஸ்ஜிதுல் இஹ்ஸான் @ கோவை

நாள்: நவம்பர் 3, 2017

உரை: Dr. முஹிய்யுத்தீன் (சென்னை)

இந்த உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்