Masjidhul Ihsaan - Coimbatore

சுய ஒழுக்கம்-சமூக மாற்றத்தின் முதல் படி.!!


சமூகத்தில் சீர்திருத்தம் மற்றும் மாற்றத்தை விதைத்திட விரும்புபவர் முதலில் கொள்ளவேண்டிய பண்பு சுய ஒழுக்கம். சீர்திருத்தத்தை மேற்கொள்பவர் அப்பழுக்கற்ற ஒழுக்க நலன்களை தன்னுள் கொண்டவராகவும் மக்களிடம் தனது ஒழுக்க மாண்புகளால் மதிக்கப்படுபவராகவும் இருத்தல் இன்றியமையாத ஒன்று.

அவ்வாறே இறைவனின் தூதர்கள் ஒவ்வொருவரும் தங்களது இறைத்தூதை மக்களின் முன்வைப்பதற்கு முன்பே அவர்களது ஒழுக்க குணநலன்கள் குறித்து அந்த மக்கள் நன்கு அறிந்தவர்களாகவே இருந்திருக்கிறார்கள்.

சமகால சமூக சீர்கேடுகளின் ஊடே சீர்த்திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றால் அந்த சீர்திருத்ததை முன்னேடுப்பவர்களான இறைத்தூதை சமர்ப்பிக்கும் பொறுப்பு சாட்டப்பட்ட முஸ்லிம்கள் எவ்வாறான குணநலன்களை கொண்டவர்களாக இருக்க வேண்டும் என்பதை விளக்கிடும் ஜுமுஆ சிறப்புரை.

ஜுமுஅ சிறப்புரை @ மஸ்ஜிதுல் இஹ்ஸான், கோவை

நாள்: நவம்பர் 25, 2016

உரை: மௌலவி முஹம்மது இஸ்மாயில் இம்தாதி

இந்த உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்



நவீன பிர்அவுனியம்.!!



கடந்த நவம்பர் 8, 2016 இரவு முதல் சாமானிய இந்திய மக்களுக்கு பேரிடியாய் வந்திறங்கிய 500-1000 ரூபாய் நோட்டுகள் பயன்படாது என்றும் அந்த நோட்டுகளை வங்கிகளில் செலுத்தி புதிய நோட்டுகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் ஓர் தான்தோன்றித்தனமான மக்கள் மீது எவ்வித கருணையுமின்றி செய்யப்பட அந்த அறிவிப்பால் மக்கள் தினம்தோறும் அலைக்கழிக்கப்பட்டு வருகிறார்கள்.

மக்கள் நலன் மீது சிறுதும் அக்கறையில்லாத இந்த செயல் ஓர் மனநோயாளி எப்படி அடுத்தவர் படும் துன்பத்தைக் கண்டு ரசிப்பானோ அதுபோன்ற ஓர் மனநிலை தான் இந்த மத்திய அரசு கொண்டுள்ளது என்பதை தெளிவுபடுத்துகிறது.

இறைவன் திருமறையில் பிர்அவுனின் ஆட்சியைக்குறித்து குறிப்பிடும் போதும் இதுபோன்ற மக்களை சுரண்டிக்கொளுக்கக்கூடிய செயலில் அவன் ஈடுபட்டதையும் அதனை எதிர்த்து மூஸா நபி அவர்கள் போராடி இறைவனின் பேருதவியால் அவனை வென்ற வரலாற்றை காண முடிகிறது. இதுபோன்ற நவீன பிர்அவுனிய ஆட்சியில் முஸ்லிம்களின் செயல்பாடு எவ்வாறு இருக்க வேண்டும் என்பதைக் குறித்து விளக்கிடும் ஜுமுஆ சிறப்புரை.

ஜுமுஅ சிறப்புரை @ மஸ்ஜிதுல் இஹ்ஸான், கோவை

நாள்: நவம்பர் 11, 2016

உரை: மௌலவி முஹம்மது இஸ்மாயில் இம்தாதி

இந்த உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்


ஷரியத்தும் ஜாஹிலியத்தும்..!!


இந்திய போன்ற பன்மைச்சமூகத்தில் ஜாஹிலியத்தின் பிடி ஓங்கும்போது முஸ்லிம்களின் வாழ்வியலுக்கு மிகுந்த நெருக்கடியான நிலை ஏற்படக்கூடிய சாத்தியம் அதிகம். அதிலும், பாசிஸ கொள்கை நாடாளும்போது, நபியவர்களும் அவரது தோழர்களும் மக்க மாநகரில் எவ்வித நெருக்கடிக்கு உட்படுத்தப்பட்டனரோ அதனை பிரதிபலிக்கும் விதமாகவே இந்திய முஸ்லிம் சமூகம் உட்படுத்தப்படும் நெருக்கடிகள் அமைந்துள்ளது.

நிலைமை இவ்வாறு இருக்க முஸ்லிம்கள் இந்த ஜாஹிலியத்தை எவ்வாறு எதிர்கொள்ளவேண்டும் அதற்கான அத்தியாவசிய தேவை குறித்தும் விளக்கிடும் ஜுமுஆ சிறப்புரை.

ஜுமுஅ சிறப்புரை @ மஸ்ஜிதுல் இஹ்ஸான், கோவை

நாள்: நவம்பர் 4, 2016

உரை: மௌலவி முஹம்மது இஸ்மாயில் இம்தாதி

இந்த உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்

https://drive.google.com/open?id=0B7o0wyRQOYOeTTg4a3Z6YlllQ2c