Masjidhul Ihsaan - Coimbatore

இஸ்லாமும் அரசியல் நெறியும்..!!


“அவனுக்கு அதிகாரம் கிடைத்து விட்டால், அவனுடைய முயற்சிகள் எல்லாம் பூமியில் குழப்பத்தைப் பரப்புவதற்காகவும் வேளாண்மையையும், மனித இனத்தையும் அழிப்பதற்காகவுமே இருக்கும்! ஆனால் (அவன் சாட்சியாக்குகின்ற) அல்லாஹ் குழப்பத்தை விரும்புவதில்லை.”
                                                         - அல்-குர்ஆன் (2:205)

இந்த இறைவசனம் தற்போதைய ஆட்சியாளர்களின் செயல்பாட்டை ஒத்து இருப்பதை காணும்போது நம்பிக்கையாளர்களாக சமூகத்தில் நிலவும் அநீதிகளை எதிர்ப்பதும் உலகில் நீதியை நிலைநாட்ட பாடுபடுவதும் ஒவ்வோர் முஸ்லிமின் கடமை என்பதை உணரமுடிகிறது.

அதன் வழியில் இஸ்லாமிய மார்க்கம் ஆட்சி-அதிகாரம் குறித்து எவ்வாறான வழிமுறையை ஒட்டுமொத்த மனித சமூகத்திற்கும் வழங்கியுள்ளது என்பதை விளக்கும் ஜுமுஅ சிறப்புரை.

ஜுமுஅ சிறப்புரை @ மஸ்ஜிதுல் இஹ்ஸான், கோவை

நாள்: மார்ச் 18, 2016

உரை: மௌலவி முஹம்மது இஸ்மாயில் இம்தாதி

இந்த உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்




இறைதிருப்தியடைந்த ஆன்மா..!!



சராசரியாக சுமார் 60 ஆண்டுகள் இந்த உலகில் கழிக்கும் மனிதன், தனக்கு வழங்கப்பட்ட இந்த வாழ்நாளில் உலகியல் நலனுக்காக தனது உழைப்பையும் திறன் முழுவதையும் பிரயோக்கித்து கடைசியில் நிராசயுடனும் மனம் திருப்தியற்ற நிலையிலும் வாழ்வின் கடைசி காலங்களை கழிப்பதை காண்கிறோம்.

சமூகமும் அறிஞர்களின் நிலையும்..!!


இந்தியாவில் அதுவும் குறிப்பாக தமிழகத்தில் இஸ்லாமிய சமூகம் எவ்வாறான கருத்தோட்டங்களையும் செயல்பாடுகளையும் மேற்கொண்டுள்ளது என்பதை ஆராய்ந்தால், அது இந்த சமூகத்தில் விரிசல்களை பிளவுகளாக மாற்றவும் மேலும் பல்வேறான கருத்துவேறுபாடுகளை முன்னெடுக்கவுமே வழிவகுத்துள்ளது.