Masjidhul Ihsaan - Coimbatore

குர்ஆனுடனான நமது தொடர்பு..!!

மனிதனை இவ்வுலகில் படைத்த இறைவன் அவனது வழிகாட்டல்களின் மூலம் மனிதனை சீர்படுத்த வேதங்களை அவனது தூதர்கள் மூலம் அவனுக்கு பல்வேறு காலக்கட்டத்தில் வழங்கி வந்துள்ளான்.

இன்றைய சூழலில், முஸ்லிம்களில் பெரும்பாலானோர் இறைவனின் இறுதி வேதமான குர்ஆனுடனான தொடர்பை வெறுமனே அதனை ஓதுதல் என்பதுடன் நிருத்திக்கொன்டதன் விளைவு, இன்று முஸ்லிம்களில் காணவேண்டிய பண்புநலன்கள் மற்றும் இந்த சமூகத்திற்கு இறைவன் கடமையாக்கியுள்ள பொறுப்புகள் குறித்து அறியாதவர்களாய் இருப்பதை காணமுடியும்.

முஸ்லிம் சமூகம் குர்ஆனுடைய செய்திகளை வாசிப்பது முதல் அதனை தங்கள் வாழ்வில் நடைமுறைப்படுத்த முற்படும்போது, இந்த சமூகம் உலகமக்கள் அனைவரிடத்தும் பெரும் தாக்கத்தை உருவாக்கக்கூடிய ஆளுமைகளாக மாற்றம் பெறுவார்கள் என்பதை விளக்கிடும் ஜுமுஆ சிறப்புரை.

ஜுமுஅ சிறப்புரை @ மஸ்ஜிதுல் இஹ்ஸான், கோவை

நாள்: ஜனவரி 27, 2017

உரை: மௌலவி முஹம்மது இஸ்மாயில் இம்தாதி

இந்த உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்

முஸ்லிம்களின் ஜல்லிக்கட்டு ஆதரவு.!!

தமிழகம் முழுவதும் மாணவ சமுதாயம் ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் நிலையில் முஸ்லிம்கள் இரு துருவங்களாக இந்த போராட்டத்திற்கு ஆதரவையும் எதிர்ப்பையும் தெரிவித்து வருகிறார்கள்.

இந்த சூழல் மட்டுமல்லாது, பொதுவாக முஸ்லிம் சமூகம் எவ்வாறான நிலைப்பாட்டை மேற்கொள்ள வேண்டும் என்பதையும் இதனைப்போன்ற போராட்டங்களுக்கான ஆதரவு மற்றும் எதிர்ப்பின் எல்லைகள் குறித்தும் விளக்கும் ஜுமுஆ சிறப்புரை.

ஜுமுஅ சிறப்புரை @ மஸ்ஜிதுல் இஹ்ஸான், கோவை

நாள்: ஜனவரி 20, 2017

உரை: மௌலவி முஹம்மது இஸ்மாயில் இம்தாதி

இந்த உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்

நபித்தோழர்களின் இறுதி நிமிடங்கள்..!! (இரண்டாம் பாகம்)

கோவை மஸ்ஜிதுல் இஹ்ஸானில் 2016-ஆம் ஆண்டின் ரமளான் மாதத்தின் 12-ஆம் நாள் தராவீஹ் தொழுகைக்குப்பின் நிகழ்த்தப்பட்ட சிறப்புரை.

தலைப்பு: நபித்தோழர்களின் இறுதி நிமிடங்கள்..!!
                    (இரண்டாம் பாகம்)

உரை:  மௌலவி. முஹம்மது ஹுசைன் மன்பஈ
              (இஸ்லாமிய அழைப்பாளர்)

இந்த உரையை கானொளியில் (YouTube) காண கீழுள்ள லிங்கை சொடுக்கவும்..

நபித்தோழர்களின் இறுதி நிமிடங்கள்..!! (முதல் பாகம்)

கோவை மஸ்ஜிதுல் இஹ்ஸானில் 2016-ஆம் ஆண்டின் ரமளான் மாதத்தின் பதினொன்றாம் நாள் தராவீஹ் தொழுகைக்குப்பின் நிகழ்த்தப்பட்ட சிறப்புரை.

தலைப்பு: நபித்தோழர்களின் இறுதி நிமிடங்கள்..!!
                     (முதல் பாகம்)

உரை:  மௌலவி. முஹம்மது ஹுசைன் மன்பஈ
              (இஸ்லாமிய அழைப்பாளர்)

இந்த உரையை கானொளியில் (YouTube) காண கீழுள்ள லிங்கை சொடுக்கவும்..

பன்மை சமூகத்தில் முஸ்லிம்கள்..!!

கோவை மஸ்ஜிதுல் இஹ்ஸானில் 2016-ஆம் ஆண்டின் ரமளான் மாதத்தின்
28-ஆம் நாள் தராவீஹ் தொழுகைக்குப்பின் நிகழ்த்தப்பட்ட சிறப்புரை.

தலைப்பு: பன்மை சமூகத்தில் முஸ்லிம்கள்..!!

உரை:  பேராசிரியர். ஹாஜா கனி
              (மாநில செயலாளர், த.மு.மு.க.)

இந்த உரையை கானொளியில் (YouTube) காண கீழுள்ள லிங்கை சொடுக்கவும்..

அன்ஸாரித் தோழர்களின் தியாகங்கள்..!!

கோவை மஸ்ஜிதுல் இஹ்ஸானில் 2016-ஆம் ஆண்டின் ரமளான் மாதத்தின் 16-ஆம் நாள் தராவீஹ் தொழுகைக்குப்பின் நிகழ்த்தப்பட்ட சிறப்புரை.

தலைப்பு: அன்ஸாரித் தோழர்களின் தியாகங்கள்..!!

உரை:  மௌலவி. முஹம்மது நூஹ் மஹ்ளரி
       (மொழிபெயர்ப்பாளர், இஸ்லாமிய நிறுவனம் அறக்கட்டளை)

இந்த உரையை கானொளியில் (YouTube) காண கீழுள்ள லிங்கை சொடுக்கவும்..

முஹாஜிர் தோழர்களின் தியாகங்கள்..!!

கோவை மஸ்ஜிதுல் இஹ்ஸானில் 2016-ஆம் ஆண்டின் ரமளான் மாதத்தின் 14-ஆம் நாள் தராவீஹ் தொழுகைக்குப்பின் நிகழ்த்தப்பட்ட சிறப்புரை.

தலைப்பு: முஹாஜிர் தோழர்களின் தியாகங்கள்..!!

உரை:  மௌலவி. முஹம்மது நூஹ் மஹ்ளரி
              (மொழிபெயர்ப்பாளர், இஸ்லாமிய நிறுவனம் அறக்கட்டளை)

இந்த உரையை கானொளியில் (YouTube) காண கீழுள்ள லிங்கை சொடுக்கவும்..

உயிரோட்டமான கலிமா..!!

கோவை மஸ்ஜிதுல் இஹ்ஸானில் 2016-ஆம் ஆண்டின் ரமளான் மாதத்தின்
27-ஆம் நாள் தராவீஹ் தொழுகைக்குப்பின் நிகழ்த்தப்பட்ட சிறப்புரை.

தலைப்பு: உயிரோட்டமான கலிமா..!!

நாள்: ஜூலை 3, 2016

உரை:  ஜனாப். A.P. நாசர்
             (இஸ்லாமிய அழைப்பாளர், பாலக்காடு)

இந்த உரையை கானொளியில் (YouTube) காண கீழுள்ள லிங்கை சொடுக்கவும்..

மூஃமீன்களின் அன்னையர்கள்..!!

கோவை மஸ்ஜிதுல் இஹ்ஷானில் 2016-ஆம் ஆண்டின் ரமளான் மாதத்தின் ஒன்பதாவது நாள் தராவீஹ் தொழுகைக்குப்பின் நிகழ்த்தப்பட்ட சிறப்புரை.

தலைப்பு: மூஃமீன்களின் அன்னையர்கள்..!!
            (முன்மாதிரி முஸ்லிம் பெண்களுக்கான வழிகாட்டுதல்கள்)

நாள்: ஜூன் 15, 2016

உரை:  மௌலவி. அப்துல் காதர் மன்பஈ
              (இஸ்லாமிய அழைப்பாளர்)

முஸ்லிம்கள் விட்டுக்கொடுக்கக் கூடாதது..!!

இவ்வுலகில் மனிதன் சமூகம், மொழி, நாடு போன்ற பல்வேறு காரணங்களால் பிரிவுபட்டிருக்கிறான். இவ்வாறு வாழும் மனிதன் தான் எந்த சூழலிலும் விட்டுக்கொடுக்க முடியாத சில பழக்கவழக்கங்கள் மற்றும் கலாச்சாரங்களை கொண்டவனாகவும் காணப்படுகிறான்.

அதேபோல, ஏக இறைவனின் மீது நம்பிக்கை கொண்ட முஸ்லிம் என்ற அடிப்படையில் ஓர் முஸ்லிம் விட்டுக்கொடுக்ககூடாத சில நற்பண்புகள் மற்றும் கொள்கைகளைக் குறித்து விளக்கிடும் ஜுமுஆ சிறப்புரை.

ஜுமுஅ சிறப்புரை @ மஸ்ஜிதுல் இஹ்ஸான், கோவை

நாள்: ஜனவரி 13, 2017

உரை: மௌலவி முஹம்மது இஸ்மாயில் இம்தாதி

இந்த உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்

இறை உவப்பை பெற..!!

மனிதன் இவ்வுலகில் தனது செயல்களுக்கான கணக்கை மறுமையில் சமர்ப்பிக்கும்போது இறைவனின் கேள்விகளுக்கு பதில் சொல்லக்கூடிய கட்டாயம் அவனுக்கு இருக்கிறது.

அதனடிப்படையில் இறைவனது உவப்பை பெற்று சுவனம் செல்ல இவ்வுலகில் எவ்வாறான வாழ்வினை மேற்கொள்ள வேண்டும் என்பதை விளக்கிடும் ஜுமுஆ சிறப்புரை.

ஜுமுஅ சிறப்புரை @ மஸ்ஜிதுல் இஹ்ஸான், கோவை

நாள்: ஜனவரி 6, 2017

உரை: மௌலவி முஹம்மது இஸ்மாயில் இம்தாதி

இந்த உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்

உலகை தொடர்ந்து-மறுமையை மறந்து.!!

மனிதன் தன் வாழ்நாள் முழுவதும் தன்னை சுற்றியுள்ள உறவுகளுக்கு உலகின் எல்லா நலன்களையும் பெற்றுத்தரும் சிந்தனையில் மறுமையை மறந்து செயல்பட்டுக்கொண்டிருக்கிறான். அவன் மறுமையில் மிகுந்த கைசேததிற்கு உள்ளாகப்போகிறான் என்பதை உணராமல் இவ்வுலக வாழ்வில் ஆழ்ந்து விடுவதன் காரணமாகவே இந்நிலையில் இருக்கிறான்.

மனிதன் எவ்வாறு இம்மை-மறுமை இரண்டிலும் வெற்றிபெற இறை வழிகாட்டல்களின் அடிப்படையில் தனது வாழ்வை அமைத்துக்கொள்ள வேண்டும் என்பதை விளக்கிடும் ஜுமுஆ சிறப்புரை.

ஜுமுஅ சிறப்புரை @ மஸ்ஜிதுல் இஹ்ஸான், கோவை

நாள்: டிசம்பர் 30, 2016

உரை: மௌலவி முஹம்மது இஸ்மாயில் இம்தாதி

இந்த உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்

தொழுகையும் இறைப்பாதுகாப்பும்..!!

இன்றைய முஸ்லிம் சமூகம் நபிகளார் (ஸல்) அவர்கள் காலத்து சஹாபாக்களுடன் ஒப்பீட்டளவில் அதிகமானவர்களாக இருந்தாலும் அவர்களுக்கு இறைவனிடத்தில் இருந்து கிடைத்த பாதுகாப்பானது இன்றைய முஸ்லிம்களுக்கு கிடைக்காமல் போனது எதனால் என்ற ஓர் சிறிய ஒப்பீடே இந்த ஜுமுஆ சிறப்புரை.

தொழுகையைக் கொண்டே அக்கால நபித்தோழர்கள் இறை உதவியை நாடினார்கள், அதன் மூலமே இறைவன் அவர்களுக்கு பெரும் வெற்றியையும் தந்தான்.

இதனை மனதில்கொண்டு தற்கால சமூகத்தின் தொழுகை குறித்தும் முஸ்லிம்கள் ஒவ்வொருவரும் தாங்களாகவே சுயபரிசோதனை மேற்கொள்ள தூண்டும் ஜுமுஆ சிறப்புரை.

ஜுமுஅ சிறப்புரை @ மஸ்ஜிதுல் இஹ்ஸான், கோவை

நாள்: டிசம்பர் 23, 2016

உரை: மௌலவி முஹம்மது இஸ்மாயில் இம்தாதி

இந்த உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்