Masjidhul Ihsaan - Coimbatore

மறுமை சிந்தனை மேலோங்கிட.!!



உலகில் வாழும் பல்வேறு வகையான நம்பிக்கை கொண்ட மக்களில் மிகவும் குறைவான குற்ற செயல்கள் காணப்படுவது இஸ்லாமிய சமூகத்தில்தான் என்பது நிதர்சனமான உண்மை. அதன் காரணம் தங்களையே அறியாமல் இஸ்லாம் அவர்களின் உள்ளத்தில் புகுத்தியிருக்கும் மறுமை மற்றும் அதனை சார்ந்த இறைவனின் தீர்ப்பு ஆகிவற்றில் முஸ்லிம்கள் கொண்டுள்ள உறுதியான நம்பிக்கையை இது உணர்த்துகிறது.

மனிதனிடம் தனது செயல்களுக்கு இறைவன் முன் கணக்கு காட்டவேண்டிய நாள் வரும் என்ற நம்பிக்கை குறையும்போதோ அல்லது அதன் மேல் நம்பிகையற்று இருக்கும் சூழலில் அவன் யாருக்கும் அஞ்சாது தனது மனம்போனபோக்கில் தனது வாழ்வில் பயணிக்கிறான். இதனால் தனது செயல்கள் எவ்வளவு தீமையானதாக இருந்தாலும் அதனைப்பற்றி அவன் எந்தவித கவலையும் கொள்வதில்லை..

ஓர் இறையடியான் இப்படிப்பட்ட மனநிலையிலிருந்து விலகி எப்போதும் மறுமை குறித்தும் அந்நாளில் இறைவனுக்கு தனது செயல்களுக்கான கணக்கை சமர்ப்பிக்கவேண்டிய அவசியம் உள்ளவனாகவே இருக்கிறான் என்பதை மனதில் ஆழமாகப்பதிந்து அதனடிப்படையில் செயல்படுபவனாகவே இருக்கிறான்.

அப்படி மனதில் எல்லா நேரத்திலும் மறுமை சிந்தனை மேலோங்கிட மேற்கொள்ளவேண்டிய வழிமுறைகளை விளக்கிடும் ஜுமுஆ சிறப்புரை.

ஜுமுஅ சிறப்புரை @ மஸ்ஜிதுல் இஹ்ஸான், கோவை

நாள்: டிசம்பர் 16, 2016

உரை: மௌலவி முஹம்மது இஸ்மாயில் இம்தாதி

இந்த உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்


மரணம் கற்றுத்தரும் பாடம்.!!



மனிதன் இறைநம்பிக்கை கொண்டவனாக இருந்தாலும் அல்லது இறைமருப்பில் இருந்தாலும், மனித குலம் முழுவதும் ஒப்புக்கொள்ளும் ஒரு மகத்தான உண்மை உலகத்தில் பிறக்கும் எல்லா உயிரும் மரணத்தை சுவைத்தே தீரவேண்டும் என்பதேயாகும்.

மரணம் குறித்து இறைவன் தனது திருமறையில் தெளிவாக விளக்குவதுடன், மரணத்தின் மூலம் நிரந்தர வாழ்கையை மனிதன் துவங்குகிறான் என்றும் அதனை வெற்றி அல்லது தோல்வியில் முடிவது ஒவ்வொரு மனிதனின் உலகியல் செயல்பாடுகளைக்கொண்டே அமையும் என்பதையும் விளக்குகிறது.

ஒரு மனிதனின் மரணத்தறுவாய் மற்றும் அதற்குப்பின் நிகழும் நிகழ்வுகளையும் விளக்கிடும் ஜுமுஆ சிறப்புரை.

ஜுமுஅ சிறப்புரை @ மஸ்ஜிதுல் இஹ்ஸான், கோவை

நாள்: டிசம்பர் 9, 2016

உரை: மௌலவி முஹம்மது இஸ்மாயில் இம்தாதி

இந்த உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்