Masjidhul Ihsaan - Coimbatore

இறைப்பாதுகாப்பும் நமது செயல்பாடுகளும்..!!



முஸ்லிம் சமூகத்தில் சிலர் தனியாகவோ குழுவாகவோ தங்களால் மட்டுமே இந்த சமூகத்தை பாதுகாக்க முடியும் எனும் எண்ணத்தில் மாபெரும் தியாகம் செய்வதாக எண்ணிக்கொண்டு செய்திடும் செயல் சமூகத்தை எவ்வளவு பதிப்பிற்கு உள்ளாக்குகிறது என்பதைப்பற்றி ஒருபக்கம் இவர்கள் கவலைகொள்வதில்லை என்றால் மறுபக்கம் இவர்கள் இதுபோன்ற செயல்களை செய்துவிட்ட பின்னர் நிகழ்த்திடும் அநீதிகளுக்கு இந்த சமூகம் அமைதிகாப்பதன் மூலம் மேலும் பாதிப்பிற்கு உள்ளாகிறது.  .     

இவர்கள் இதற்கும் ஒருபடி மேலே சென்று தங்களைப் படைத்த இறைவனின் பாதுகாப்பை மறந்து தங்களால் மட்டுமே இந்த சமூகத்தை காத்திட முடியும் என்ற மனநிலைக்கு வந்துவிடுகின்றனர். இப்படியான சூழலில் முஸ்லிம் சமூகம் இவர்களை புறந்தள்ளிவிட்டு இறைவனின் பாதுகாப்பை பெறுவதற்கும் சமூகத்தை வலுவானா கட்டமைப்பில் வார்த்திடவும் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்பதை விளக்கிடும் ஜுமுஆ சிறப்புரை.

உரை: மௌலவி M. முஹம்மது இஸ்மாயில் இம்தாதி

நாள்: ஏப்ரல் 27, 2018

@ மஸ்ஜிதுல் இஹ்ஸான், கோவை

இந்த உரையினை கேட்கவும் பதிவிறக்கம் செய்திடவும் கீழுள்ள சுட்டியை சொடுக்கவும்...


ஆசிஃபா கொலையும் முஸ்லிம்களின் செயல்பாடுகளும்..!!



காஷ்மீர் மாநிலம் கத்துவா எனும் கிராமத்தில் குதிரை மேய்த்து தங்களது பிழைப்பை நடத்தும் பக்கர்வால் சமூகத்தைச் சேர்ந்த ஆசிஃபா எனும் எட்டு வயது சிறுமி ஹிதுக்களின் கோயிலினுள்ளே எட்டு நாட்கள் அடைத்துவைக்கப்பட்டு சித்திராவதைகளுக்கு உட்படுத்தப்பட்டு கொடூரமான முறையில் கொலையும் செய்யப்பட்டது நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.     

இஸ்லாமிய மார்கத்தை எதிர்ப்பவர்கள் தொடர்ந்து இந்த சமூகத்தின் மீது பல்வேறு கொடூரங்களை கட்டவிழ்க்கும் சூழலில் கூட முஸ்லிம்கள் இறைவன் அவர்களுக்கு வகுத்துத்தந்த கோட்பாடுகளின் அடிப்படையில் செயல்படுவதன் முக்கியத்துவம் மற்றும் இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நடக்காது இருக்க முஸ்லிம்கள் என்ன செய்யவேண்டும் என்பது குறித்து விளக்கிடும் ஜுமுஆ சிறப்புரை.

உரை: மௌலவி M. முஹம்மது இஸ்மாயில் இம்தாதி

நாள்: ஏப்ரல் 20, 2018

@ மஸ்ஜிதுல் இஹ்ஸான், கோவை

இந்த உரையினை கேட்கவும் பதிவிறக்கம் செய்திடவும் கீழுள்ள சுட்டியை சொடுக்கவும்...

சமகால ஊடமும் முஸ்லிம்களும்..!!



உலக வரலாற்றில் கப்பல்படை யாரிடம் இருந்ததோ 18-ஆம் நூற்றாண்டு அவர்களுடையதாய் இருந்தது, விமானப்படை யாரிடம் இருந்ததோ 19-ஆம் நூற்றாண்டு அவர்களுடையதாய் இருந்தது, ஊடகம் யார் கையில் இருக்கிறதோ 20 & 21-ஆம் நூற்றாண்டு அவர்களுடையதாய் இருக்கிறது.    

உலக மக்களின் வாழ்வியல் மட்டுமல்லாது சிந்தனைப்போக்கினை மாற்றிடும் வல்லமை சமகால ஊடகங்களிடம் இருக்கிறது. எப்படி நாடோடிகளாய், உலகப்போரின் அகதிகளாய் மாறிய சமூகம் ஊடகத்தின் தாக்கத்தால் இன்று அணைத்து வல்லரசுகளையும் ஆட்டிப்படைப்பதோடு, தனக்கென ஒரு நாட்டை பல்வேறு மனித உரிமை மீறல்களினாலும் அமைத்துக்கொண்டுள்ளது. நம் நாட்டின் ஆட்சியில் அமர்ந்துள்ளவர்கள் கூட இதே ஊடகத்தின் கருத்துருவாக்கத்தின் மூலம் தான் ஆட்சியை பிடித்தார்கள் என்பது தமக்கு படிப்பினையாய் இருக்கும்போதும்கூட முஸ்லிம் சமூக மக்கள் நவீன ஊடகங்களில் தங்களது பங்களிப்பினை வழங்கிட முன்வருவதில்லை.

எந்த சமூகம் தனது வரலாறு மற்றும் சமூக பங்கினை சரிவர பதிய தவறுகிறதோ அந்த சமூகத்திற்கு எதிராக வரலாற்று திரிப்புகள் மேற்கொள்ளப்படும்போது அந்த சமூகத்தால் அதானை எதிர்கொள்வது சிரமமான ஒன்றாக மாறிவிடும். ஆகையால் நமது சமூகத்தின் உண்மை வரலாறு மட்டுமின்றி இஸ்லாமிய வாழ்வியல் நெறியினை சரியான கோணத்தில் வெகுஜன மக்களுக்கு மத்தியில் கொண்டு செல்வதற்கு ஊடகத்தின் துணைகொண்டு செயல்பாடுகள் அமைந்திட வேண்டும் என்பதை உணர்த்திடும் ஜுமுஆ சிறப்புரை.

உரை: ஜனாப். V.S. முஹம்மது அமீன்
     (மக்கள் தொடர்பு & ஊடகச் செயலாளர், JIH
     துணை ஆசிரியர், சமரசம் இதழ்) 

நாள்: ஏப்ரல் 6, 2018

@ மஸ்ஜிதுல் இஹ்ஸான், கோவை

இந்த உரையினை கேட்கவும் பதிவிறக்கம் செய்திடவும் கீழுள்ள சுட்டியை சொடுக்கவும்...

முஸ்லிம் சமூகமும் சீர்திருத்தமும்..!!



உலக மக்களுக்கு நேரிய வாழ்வியலை எடுத்துரைத்திடவும் அவர்களை சத்தியத்தின் பாதையில் அழைப்பதற்கும் இறைவனால் உலகில் அவனது பிரதிநிதிகளாக நியமிக்கப்பட்டுள்ளது முஸ்லிம் சமூகம். ஆனால், இன்றைய முஸ்லிம் சமூகம் “மக்களுக்கு சான்று பகரும்” தனது பொறுப்பை தட்டிக்கழிப்பது மட்டுமல்லாது அதனை ஒரு பொருட்டாகவே மதிக்காமல் தன் மனம்போன போக்கில் தனது வாழ்வியலை அமைத்துக்கொண்டு இருக்கிறது.

மனித சமூகம் சீர்திருத்தம் பெற ஒழுக்கம், நீதி, வாழ்வியலில் அனைத்து துறைகளிலும் முன்மாதிரி  அமைந்திட வேண்டிய சமூகம் இன்று பல்வேறு சீர்கேடுகளில் சிக்கி சிதறுண்டு கிடக்கிறது.

இவைகளில் இருந்து சமூகம் மீண்டு தனது முழுமுதல் கடமையான மக்களுக்கு சான்று பகர்தலையும் சமூகத்தை சீர்திருத்துவதிலும் முனைப்புடன் செயலாற்றிட முன்வர வேண்டும் என்பதை உணர்த்திடும் ஜுமுஆ சிறப்புரை.

உரை: மௌலவி. முஹம்மது இஸ்மாயில் இம்தாதி

நாள்: மார்ச் 30, 2018

@ மஸ்ஜிதுல் இஹ்ஸான், கோவை

இந்த உரையினை கேட்கவும் பதிவிறக்கம் செய்திடவும் கீழுள்ள சுட்டியை சொடுக்கவும்...