மக்களோடு நாம் மக்களுக்காக நாம்..!!


நபிகளார் (ஸல்) அவர்கள் சாமானிய முஸ்லிம்களின் வாழ்வில் எங்கே இருக்கிறார் என யோசித்தால் அது தொழுகை, நோன்பு, ஜகாத் போன்ற வணக்க வழிபாடுகளுடன் ஒன்றார கலந்திருப்பதை பார்க்கலாம். இஸ்லாமிய அடிப்படையில் கூறவேண்டும் எனில் வாழ்வியலின் ஒவ்வொரு பரிமாணத்திலும் நபிளார் (ஸல்) அவர்களின் பிரதியாகவே ஓர் முஸ்லிம் தன்னை வார்த்தெடுக்க வேண்டும்.

முஸ்லிம்களாகிய நமது வாழ்வில் வெறுமனே வணக்க-வழிபாடு என்ற பரிமாணத்தில் மட்டுமல்லாது மக்கள் நலனிலும் பங்கெடுத்திடவும் நம் சக மனிதர்களுக்கு மத்தியில் நபிகளாரின் வாழ்வியலை விளக்கிடும் வகையில் நமது வாழ்வியலை மாற்றியமைத்திட வேண்டிய தேவையை விளக்கிடும் ஜுமுஆ சிறப்புரை.     

மஸ்ஜிதுல் இஹ்ஸான் @ கோவை

நாள்: டிசம்பர் 8, 2017

உரை: மௌலவி முஹம்மது இஸ்மாயில் இம்தாதி

இந்த உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்மௌலூதும் இஸ்லாமிய ஆன்மீகமும்..!!ஆண்டுதோறும் ரபிய்யுல் அவ்வல் மாதம் நபிகளாரின் மீது புகழ்மாலை பாடுவதனால் தங்களின் நபிநேசத்தை வெளிப்படுத்துவதாகவும் அதன் மூலம் மறுமையில் பயன் கிடைக்கும் எனும் நம்பிக்கையில் இஸ்லாமிய ஏகத்துவ கோட்பாட்டின் அடிப்படையினையே பலகீனப் படுத்தும் விதமாக ஒருசாரார் நடந்துகொள்கின்றனர். தௌஹீத் சிந்தனைப்போக்கு கொண்டு இந்த மௌலூது கலாச்சாரத்தை கடுமையாக எதிர்க்கிறோம் எனும் பெயரில் ஒருவரை ஒருவர் வெறுப்பேற்றும் செயலின் உச்சமாக பள்ளியின் பாங்கு சொல்ல பயன்படுத்தப்படும் ஒலிபெருக்கியில் மற்ற நேரங்களைவிட அதிகமான சப்தத்துடன் இந்த மௌலூது ஓதுவது ஆங்காங்கே நடந்துவருகிறது.

இஸ்லாமிய சமூகத்தின் புரையோடிப்போயுள்ள இப்படியான அனாச்சாரங்களை களைவதுடன், இந்த சமூகத்தின் மீது இறைவன் சாட்டியுள்ள கடைமைகளின் அடிப்படையில் மனித மனங்களை வென்றெடுக்கக் கூடியவர்களாய் மாறிட வேண்டிய இன்றியமையாத தேவையை விளக்கிடும் ஜுமுஆ சிறப்புரை.    

மஸ்ஜிதுல் இஹ்ஸான் @ கோவை

நாள்: டிசம்பர் 1, 2017

உரை: மௌலவி முஹம்மது இஸ்மாயில் இம்தாதி

இந்த உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்

வாழ்வில் பிரதிபலிப்பதே நபிநேசத்தின் நோக்கம்..!!வருடம்தோறும் ரபிய்யுல் அவ்வல் மாதம் நபிகளாரின் மீது புகழ்மாலை பாடுவதனால் தங்களின் நபிநேசத்தை வெளிப்படுத்துவதாகக் கருதிக்கொண்டு சாமானிய மக்களின் சிந்தனைகளையும் இஸ்லாமியா வாழ்வியலில் இருந்து திசை மாற்றுவதோடு. இப்படி புகழ்மாலை பாடுவதே நபிகளார் மீது முஸ்லிம்களின் தலையாய கடமையாய் முன்னிறுத்துகின்றனர்.

ஆனால் நபிகளாரின் மீதான நேசத்தை அவரது தோழர்கள் எவ்வாறு வெளிப்படுத்தினார்கள் என்பதை நாம் கவனிக்க மறந்துவிடுகிறோம். நபிகளாரின் தோழர்கள் அவரது வழிகாட்டல்களையும் வழிமுறைகளையும் தங்களது வாழ்வில் செயல்படுத்துவதே அவரின்மீது கொண்ட நேசத்தின் வெளிபாடாக கருதினர்.

உலக மக்களுக்கு சான்றுபகரும் பொறுப்பை சுமந்துள்ள முஸ்லிம்கள் தங்களது வாழ்வியலில் நபிகளார் அவர்களை முழுமையாக பிரதிபலிக்கும் வகையில் அமைத்திட வேண்டும் என்பதை விளக்கிடும் ஜுமுஆ சிறப்புரை.

மஸ்ஜிதுல் இஹ்ஸான் @ கோவை

நாள்: நவம்பர் 24, 2017

உரை: மௌலவி முஹம்மது இஸ்மாயில் இம்தாதி

இந்த உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்கலப்படமில்லா இஸ்லாமிய சமூகம் - Part 2..!!


கடந்த வாரம் உணவுப்பொருட்களில் கலப்படம் காரணமாக நாம் அதனை சரி செய்திட மேற்கொள்ளும் விழிப்புணர்வும் சீர்திருத்தம் பெற்றிட பெரும் முயற்சிகள் மேற்கொகிறோம். அதேபோல் நமது வாழ்வின் அணைத்து துறைகளிலும் இறைநெறி இன்றியமையாத அங்கம் வகிக்கவேண்டிய நிலை இல்லாமல் மனோயிச்சையின் அடிப்படையிலும், அனாச்சாரங்களின் அடிப்படையிலும் நமது வாழ்வியலை அமைக்கும்போது அது மாசடைகிறது.

இப்படிப்பட்ட சூழலில் முஸ்லிம்களின் மீது இறைவன் சுமத்தியுள்ள “முன்மாதிரி சமூகம்” என்ற அந்தஸ்தின் அடிப்படையிலும், நாம் ஏற்றிருக்கும் கலிமாவின் அடிப்படையில் “சாட்சி பகரும்” பொறுப்பையும் பிற சமூகத்தவரிடம் எவ்வாறு கொண்டு சேர்க்கப்போகிறோம் என்பதை நாம் சிந்திக்க வேண்டிய கட்டாய நிலையில் இன்றைய இஸ்லாமிய சமூகம் இருக்கிறது. அல்லாஹ் நம் சமூகத்தின் மீது சுமத்தியுள்ள இந்த “சாட்சி பகரும்” பணியை செய்திட நாம் முதலில் நம் சமூகத்தில் புகுத்தப்பட்டுள்ள கசடுகளையும் கலப்படங்களையும் களைந்திட வேண்டிய அவசியத்தையும், இறைமார்க்கம் பிற சமூக மக்களிடமும் சென்றடையக்கூடிய  சிறந்த முன்மாதிரிகளாக நாம் மாறிட வேண்டும் என்பதை விளக்கிடும் ஜுமுஆ சிறப்புரை.

மஸ்ஜிதுல் இஹ்ஸான் @ கோவை

நாள்: நவம்பர் 17, 2017

உரை: மௌலவி முஹம்மது இஸ்மாயில் இம்தாதி

இந்த உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்

https://drive.google.com/file/d/1269xl7IgPz7VqtbpzFwrD88ld4XAB9Gj


கலப்படமில்லா இஸ்லாமிய சமூகம்..!!


நாம் அன்றாடம் உபயோகிக்கும் பொருளில் ஏதேனும் கலப்படம் காணப்பட்டாலோ அதன் தரத்தில் குறைபாடுகள் கண்டறியப்பட்டாலோ உணர்வு ரீதியாக மட்டுமல்லாமல் சிந்தனை ரீதியாகவும் நாம் அதனைக்குறித்து விளக்கம் பெற்றிடக்கூடிய  சிந்தனை ஓட்டமும், அது குறித்த விழிப்புணர்வும் பெற்றிட பெரும் முயற்சிகள் மேற்கொகிறோம்.

ஆனால், முஸ்லிம் தனி நபர் மற்றும் சமூகத்தை ஆட்க்கொண்டுள்ள கலப்படங்களை பற்றிய சிந்தனையை நாம் மேற்கொள்ள முயற்சிப்பதில்லை. முஸ்லிம் சமூகம் இன்று சந்தித்து வரும் சவால்கள் நிறைந்த சிக்கலான பிரச்சினைகளின் அடிப்படைக் காரணியாக இருப்பது இந்த கலப்படங்களே. இந்த கலப்படங்கள் எவ்வாறு சமூகத்தினை பாதிக்கிறது அதனை எவ்வாறு களைவது குறித்து விளக்கிடும் ஜுமுஆ சிறப்புரை.

மஸ்ஜிதுல் இஹ்ஸான் @ கோவை

நாள்: நவம்பர் 10, 2017

உரை: மௌலவி முஹம்மது இஸ்மாயில் இம்தாதி

இந்த உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்


கருத்துச்சுதந்திரம்..!!இன்றைய கால சூழலில் முஸ்லிம் சமூகம் பொதுவில் மற்ற பிரிவினர் மீதான கருத்துகளுக்கு ஆர்ப்பறித்திடும் அதேசமயம், முஸ்லிம் சமூகத்தின்மீதோ அல்லது இஸ்லாத்தின்மீதோ எதிர்கருத்துகள் வரும்போது அதன் தன்மையை உணராது அதனை எதிர்ப்பதும் அன்றாட நிகழாவாக மாறியிருக்கிறது.

இந்த சூழலில் இஸ்லாம் நமக்கு கற்றுதரும் கருத்துச்சுதந்திரம் என்பது மனித உரிமை மட்டுமல்லாது இறைநம்பிக்கை சார்ந்த ஒன்றாகவே இருக்கிறது. இதற்கான எடுத்துக்காட்டுகளாக நபிகளார் அவர்கள் பத்ரு போர்க்களத்தில் தம் சாமானிய தோழர்களில் ஒருவர் கூறிய கருத்திற்கேற்ப கிணற்றை கைப்பற்றியது முதல், தனது விருப்பத்திற்கு மாறாக உஹதில் போர் புரிய சென்றதும், அதனைப்போலவே பல்வேறு தருணங்களில் தனது தோழர்களின் அறிவுரைகளை பெற்றுக்கொண்டதும் நமக்கு படிப்பினையாக அமைந்துள்ளது.

இதனை மனதில்கொண்டு தற்போதைய முஸ்லிம் சமூகம் அது பெரும்பான்மையாக இருந்தாலும் சரி சிறுபான்மையாக இருந்தாலும் சரி மக்களின் கருத்துச்சுதந்திரத்தை நடைமுறைப்படுத்துவதுடன் அதனை பாதுகாப்பதும் அதன்மீதான கடமை என்பதனை விளக்கிடும் ஜுமுஆ சிறப்புரை. 

மஸ்ஜிதுல் இஹ்ஸான் @ கோவை

நாள்: நவம்பர் 3, 2017

உரை: Dr. முஹிய்யுத்தீன் (சென்னை)

இந்த உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்


சீர்கேட்டின் உச்சம் காதல்..!!கோவை நகரைச்சேர்ந்த முஸ்லிம் பட்டதாரி யுவதி காதல் வயப்பட்டு இறுதியில் அவருடைய உயிரையே பறித்திட்ட சம்பவம் செய்தி ஊடகங்கள் மற்றும் பத்திரிக்கைகளிலும் மேலோட்டமாக வெளியிடப்பட்டது. பொதுவில் கல்வி குறித்து அதிக கவணம் செலுத்தாத ஓரு சமூகம் இன்று பெண்களின் கல்வி குறித்தும் அதன் அத்தியாவசிய தேவை குறித்தும் உணர்ந்து அதனை செயலாக்கம் செய்துவரும் இந்த தருணத்தில் இவ்வாறான நிகழ்வுகள் பெண்களுக்கு அந்த சமூகம் வழங்கிவரும் கொஞ்ச நஞ்ச சுதந்திரத்தினையும் பறித்திடும் வகையில் அமைந்துவிடுகிறது.

இவ்வாறான காதல் ஆண்-பெண் என இருபாலருக்கும் பொதுவான ஒழுக்க சீர்கேடாகவே இருக்கிறது. இளம் தலைமுறையினருக்கு இதனைக்குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன் அவர்களது கடமைகளை அவர்களுக்கு உணர்த்துவதும், இறைவன் மீதான நம்பிக்கை மற்றும் மறுமை குறித்த அச்சத்தையும் அவர்கள் மனதில் ஆழவிதைப்பதுமே இந்த சீர்கேட்டில் இருந்து அவர்களை காத்திட நாம் மேற்கொள்ள வேண்டிய கடமை என்பதை விளக்கிடும் ஜுமுஆ சிறப்புரை.

மஸ்ஜிதுல் இஹ்ஸான் @ கோவை

நாள்: அக்டோபர் 27, 2017

உரை: மௌலவி முஹம்மது இஸ்மாயில் இம்தாதி

இந்த உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்


மனித வாழ்வியலும் மறுமையும்..!!

தற்கால முஸ்லிம் சமூகத்தில் தொழுகை, நோன்பு போன்ற இபாதத்துகள் குறித்த விழிப்புணர்வு மேலோங்கியுள்ள நிலையில், இஸ்லாம் கூறும் வாழ்வியல் நெறிகளின்படி அவர்களின் வாழ்கையை முறைபடுத்திக்கொள்ள வெகு சிலரே முயற்சிகள் மேற்கொள்கிறார்கள்.


இதற்கான முக்கிய காரணி மறுமை குறித்த அச்சமின்மையே ஆகும். இறைவன் மனிதனுக்கு அருளிய வளங்களையும் அவனது ஆயுளையும் எவ்வாறு செலவழித்தான் என்று மறுமையில் இறைவனிடம் கணக்கு சமர்ப்பிக்க வேண்டியவனாக இருக்கிறான் என்பதை மறந்து உலகின் வனப்பில் மறுமையை மறந்துவிடுகிறான்.

இறைநம்பிக்கையாளனாக தனது வாழ்வின் நோக்கத்தை புரிந்து, அதன் அணைத்து அம்சங்களையும் இஸ்லாத்தின் அடிப்படைகளின்படி அமைத்துகொள்வதே அவனுக்கு மறுமை வெற்றியை பெற்றுதரும் என்பதை விளக்கிடும் ஜுமுஆ சிறப்புரை.

மஸ்ஜிதுல் இஹ்ஸான் @ கோவை

நாள்: அக்டோபர் 20, 2017

உரை: மௌலவி முஹம்மது இஸ்மாயில் இம்தாதி

இந்த உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்

https://drive.google.com/file/d/0B7o0wyRQOYOedm5jQVVaN0Z4eEk


மானம் காப்பதும் மனித உரிமையே..!!ஒரு மனிதன் பல்வேறு காலகட்டங்களில் சிலரது தனி மனித குறைகள் மற்றும் தவறுகளை பிரர் முன் கூறி அவரை சிறுமை படுத்துவதும் அவரது மானத்தை பறிக்கும் விடயமே.

ஒரு இறைநம்பிக்கையாளன் தனது சகோதரனின் குறைகளை யாருக்கும் தெரியாது மறைத்து வைப்பதன் மூலம் அவருக்கு மறுமையில் உயிருடன் புதைக்கப்பட்ட ஓர் பெண் குழந்தைக்கு உயிர் கொடுத்த பலனை பெற்றுதரும். அப்படி நடப்பதன் மூலம் அந்த மனிதன் தன்னை திருத்திக்கொள்ள நல்ல சந்தர்ப்பத்தையும் இறைவன் வளங்கிடக்கூடும். பிற முஸ்லிமின் மானத்தைக் காப்பது ஒவ்வோர் முஸ்லிமுக்கும் கடமையாகும் என்பதை விளக்கிடும் ஜுமுஆ சிறப்புரை.

மஸ்ஜிதுல் இஹ்ஸான் @ கோவை

நாள்: அக்டோபர் 13, 2017

உரை: மௌலவி முஹம்மது இஸ்மாயில் இம்தாதி

இந்த உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்

சோதனை மேல் சோதனை..!!மனிதன் தனது வாழ்நாளில் சிறியது முதல் பெரியதாக பலவித சோதனைகளை சந்திப்பதே வாழ்வின் நியதி. ஒரு முஃமீன் தனக்கு வரும் சோதனைகளை எவ்வாறு கருத வேண்டும் அதனை வென்றெடுக்க இஸ்லாம் காட்டித்தரும் வழிமுறைகள் குறித்து விளக்கிடும் ஜுமுஆ சிறப்புரை.

மஸ்ஜிதுல் இஹ்ஸான் @ கோவை

நாள்: அக்டோபர் 06, 2017

உரை: மௌலவி முஹம்மது இஸ்மாயில் இம்தாதி

இந்த உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்

ஆடம்பர சமூகமும் அதன் அவல நிலையும்..!!


மத்திய கிழக்கு நாடுகள் முதல் தற்போது பர்மா வரை முஸ்லிம் சமூகம் பல வகையான அழிவுகளுக்கும் அச்சுறுத்தல்களுக்கும் ஆளாகிக்கொண்டு இருக்கிறது அன்றாட செய்தியாய் கேட்டும் கண்டும் வருகிறோம்.

இப்படி முஸ்லிம் சமூகம் உலகம் முழுவதும் அடக்குமுறைகளுக்கும் இழப்புகளுக்கும் உள்ளாவதன் காரணம் வெறுமனே பெரும்பான்மை முஸ்லிமல்லாத சமூகத்தின் அதன்மீதுள்ள வெறுப்பா அல்லது அதனையும் தாண்டியதா என ஆழ்ந்து சிந்தித்தால், அதற்காண காரணமாக இரண்டைக் குறிப்பிடலாம். ஒன்று, முஸ்லிம் சமூகத்தில் நிலவும் ஒற்றுமையின்மை, மற்றொன்று முஸ்லிம் சமூகத்தில் வேரூன்றிவிட்ட ஆடம்பரங்களும் அனாச்சாரங்களும் என்பதனை விளக்கிடும் ஜுமுஆ சிறப்புரை.

மஸ்ஜிதுல் இஹ்ஸான் @ கோவை

நாள்: செப்டம்பர் 29, 2017

உரை: மௌலவி முஹம்மது இஸ்மாயில் இம்தாதி

இந்த உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்

https://drive.google.com/file/d/0B7o0wyRQOYOeb3dJZEtZa3JDMVk