இஸ்லாமிய கண்ணோட்டத்தில் குழந்தைகள் வளர்ப்பு..!!


“இறைவா, எங்கள் மனைவி மக்களை கண்ணுக்கு குளிர்ச்சியானவர்களாக ஆக்கிவைப்பாயாக, மேலும் எங்களை இறைநம்பிக்கையுடையவர்களுக்கு தலைவர்களாய் ஆக்குவாயாக” என தனது திருமறையில் கற்றுத்தரப்படும் பிரார்த்தனையின் மூலம் குழந்தைகளை எவ்வாறு வளர்த்தெடுக்க வேண்டும் என்பதை இறைவன் நாடுகிறான் என்பதை விளக்குவதாய் அமைந்துள்ளது.

ஒரு முஃமீன் தனது குழந்தைகளை வளர்ப்பதில் மூன்று பருவங்களாக பிறித்து, அதில் முதல் ஏழு வயது வரை குழந்தையோடு குழந்தையாக விளையாடி அவர்களது மதிப்பை பெறுதல், அடுத்த ஏழு வருடங்கள் அவர்களுக்கு நற்பண்புகளையும் இஸ்லாமிய அடிப்படைகளையும் கர்ப்பிப்பதிலும், அடுத்த ஏழு வருடங்கள் அவர்களது நண்பர்களாய் இருந்து அவர்களது தவறுகளை திருத்தி நற்போதனைகள் புரிவதும் அவரது கடமை என்கிற இஸ்லாமிய வழிகாட்டுதல்களை விளக்கும் ஜுமுஆ சிறப்புரை.

மஸ்ஜிதுல் இஹ்ஸான் @ கோவை

நாள்: பிப்ரவரி 24 2017

உரை: மௌலவி முஹம்மது இஸ்மாயில் இம்தாதி

இந்த உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்..


குழந்தைகள் வளர்ப்பில் தந்தையின் பங்கு..!!


இறைவன் மனிதர்களில் பெரும்பான்மை மக்களுக்கு கொடுத்து சிலருக்கு மட்டும் ஓர் அருட்கொடையில் இருந்து தொலைவில் வைத்திருப்பான், அதுதான் குழந்தைகள் எனும் அருட்கொடை. தந்தை என்ற ஓர் ஆணின் அந்தஸ்து உயரும்போது அவனுக்கு அவன் விரும்பாமலேயே கட்டாயமான சில பொறுப்புகளும் சுமத்தப்படுகிறது.

அதில் ஒன்று தான் தனக்கு கிடைத்த குழந்தை செல்வத்தை நல்ல குணநலன்களுடன் இறைவனுக்கு அஞ்சி நடக்கக்கூடியவர்களாக வளர்ப்பது.

தந்தை-பிள்ளை என்ற உறவு உலகில் வாழும் வருடங்களோடு முடிந்துவிடாமல், மறுமை வரை தொடரக்கூடிய பிணைப்பாக இருப்பதும் அந்த மனிதன் தனது மரணத்திற்கு பிறகு தனக்காக பிரார்திக்ககூடிய மக்களை விட்டுச்செல்வதே அவனுக்கு மறுமை வரையில் பயனளிக்கக்கூடிய ஒன்றாக இருக்கும் என்பதை விளக்கும் ஜுமுஆ சிறப்புரை.

மஸ்ஜிதுல் இஹ்ஸான் @ கோவை

நாள்: பிப்ரவரி 17, 2017

உரை: மௌலவி முஹம்மது இஸ்மாயில் இம்தாதி

இந்த உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்..

https://drive.google.com/drive/folders/0B7o0wyRQOYOeUVRMeHUtWGJIa0E


முஃமீன்களுக்கு இருக்கவேண்டிய உயரிய பண்புகள் (மலையாளம்)..!!


நபிகளார் வார்த்தெடுத்த ஆளுமைகளான சஹாபாக்கள் எவ்வாறான உயரிய பண்புநலன்கள் கொண்டிருந்தனர் என்பதையும், அந்த பண்புகளினால் எவ்வாறு அவர்கள் உயர் நிலையை அடைந்தனர் என்பதையும் எடுத்துக்காட்டாக கொண்டு முஃமீன்கள் வளர்த்துக்கொள்ள வேண்டிய பண்புகள் குறித்தும் அவர்களது கடமைகளைக் குறித்தும் விளக்கும் ஜுமுஆ சிறப்புரை (மலையாளம்).

மஸ்ஜிதுல் இஹ்ஸான் @ கோவை

உரை: மௌலவி நஹாஸ் மாலா
     அகில இந்தியத் தலைவர்,
             இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு (SIO)

இந்த உரையினை கேட்க்க/பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கினை சொடுக்கவும்..
பரிகாசிப்பதும் தீமையே..!!


மனிதன் தனது நண்பர்கள் அல்லது நெருங்கிய உறவினர்கள் மத்தியில் இருக்கும்பொழுது அவர்களைக் கவருவதற்காக பல நபர்களை வேடிக்கைக்காக அவர்களது அங்க அசைவுகள், பேச்சு, நடை, உடை, பாவனை போன்றவற்றை பரிகாசிப்பதும் அதனைக்கொண்டு மற்றவர்கள் மத்தியில் தன்னை உயர்ந்தவன் என காட்டிக்கொள்வதும் அம்மனிதனின் இம்மை-மறுமை இரண்டையும் பாதிக்கக்கூடிய ஒன்றாகும்.

அவ்வாறு பரிகாசம் செய்பர்வர்களின் கைசேத நிலையினையும், இந்த பழக்கம் இஸ்லாமிய நற்பண்புகளுக்கு முரணான செயல் என்பதையும் விளக்கிடும் ஜுமுஆ சிறப்புரை.

ஜுமுஅ சிறப்புரை @ மஸ்ஜிதுல் இஹ்ஸான், கோவை

நாள்: பிப்ரவரி 3, 2017

உரை: மௌலவி முஹம்மது இஸ்மாயில் இம்தாதி

இந்த உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்