அரசியல் அனாதைகள் பட்டம் ஏன் ?


 اَفَمَنۡ اَسَّسَ بُنۡيَانَهٗ عَلٰى تَقۡوٰى مِنَ اللّٰهِ وَرِضۡوَانٍ خَيۡرٌ اَمۡ مَّنۡ اَسَّسَ بُنۡيَانَهٗ عَلٰى شَفَا جُرُفٍ هَارٍ فَانۡهَارَ بِهٖ فِىۡ نَارِ جَهَـنَّمَؕ وَاللّٰهُ لَا يَهۡدِى الۡقَوۡمَ الظّٰلِمِيۡنَ ﴿9:109﴾ لَا يَزَالُ بُنۡيَانُهُمُ الَّذِىۡ بَنَوۡا رِيۡبَةً فِىۡ قُلُوۡبِهِمۡ اِلَّاۤ اَنۡ تَقَطَّعَ قُلُوۡبُهُمۡؕ وَاللّٰهُ عَلِيۡمٌ حَكِيۡمٌ ﴿9:110﴾

(இனி நீர் என்ன கருதுகின்றீர்?) இறையச்சத்தையும், இறை உவப்பையும் அடிப்படையாகக் கொண்டு தம் கட்டடத்தை நிர்மாணித்தவர் சிறந்தவரா? அல்லது வெள்ளத்தால் அரிக்கப்பட்ட உறுதியற்ற ஓடைக்கரையின் மீது தனது கட்டடத்தை நிர்மாணித்து, பிறகு அக்கட்டடத்துடன் சேர்ந்து தானும் நரக நெருப்பில் நேராக வந்து விழுந்து விட்டானே அவன் சிறந்தவனா? அக்கிரமம் இழைக்கும் இத்தகையக் கூட்டத்தாருக்கு அல்லாஹ் நேர்வழி காட்டுவதில்லை.

அவர்கள் எழுப்பிய இந்தக் கட்டடம் அவர்களின் உள்ளங்களில் என்றைக்கும் அமைதியின்மையை ஏற்படுத்திக் கொண்டிருக்கும்; அவர்களின் உள்ளங்கள் நொறுங்கினால் ஒழிய (அந்த அமைதியின்மை நீங்குவதற்கு எவ்வழியும் இல்லை!) அல்லாஹ் அனைத்தையும் தெரிந்தவனாகவும், நுண்ணறிவாளனாகவும் இருக்கின்றான்.
-– அல்-குர்ஆன் (9:109 -110)

தற்கால சூழலில் உலக அரங்கிலும் சரி, தமிழக அளவிலும் சரி முஸ்லிம் சமூகம் ஆதரவற்றவர்களாய், தங்களையே காத்துக்கொள்ளவும் தங்களது தேவைகளையும் பூர்த்தி செய்துகொள்ளவும் அடுத்தவர்களையே சார்ந்திருக்க வேண்டியிருக்கிறது. இதற்கும் மேலாக எவ்வித பிடிப்புமின்றி ஓட்டு வங்கியாக மட்டுமே இந்த சமூகத்தை பயன்படுத்தி பிறகு நிற்கதியில் விட்டுவிடும் சூழலும் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. இந்தச் சூழலில் நம் சமூகம் அரசியல் அனாதைகளாய் விட்டுவிடப்பட்டுள்ளனர் என்பதே நிதர்சனமான உண்மை.

இதில் கவலைக்குரிய விஷயம் என்னவென்றால் இந்த சமூகத்தின் உரிமைகளை மீட்டுத்தருகிறோம் என்று கூறி இயக்கங்களும் கழகங்களையும் நிறுவியவர்கள் பின்னலில் தங்களது தலைவர்களது விருப்பங்களுக்கு பலியாகி சிதறி சின்னாபின்னமாகி கிடப்பதை காண்கிறோம். இப்படிப்பட்ட சூழலைக் காணும் சமூக நலனில் அக்கறை கொண்டவரின் மனதில் அவர்களின் பால் வெறுப்பும் நிராசையும் ஏற்படுகின்றது.

இறைவன் தனது திருமறையில் அரசியல் மற்றும் உரிமைகளைப் பெற எவ்வாறான சமூகக் கட்டமைப்பை முஸ்லிம்கள் மேற்கொள்ளவேண்டும் என்று குறிப்பிடுகிறான் என்பதையும், மற்றும் சமூகத் தலைவர்களுக்கான தகுதியும் அவர்களின்மீது சுமத்தப்பட்டுள்ள கடமைகளையும் விளக்கும் ஜுமுஅ சிறப்புரை.

ஜுமுஅ சிறப்புரை @ மஸ்ஜிதுல் இஹ்ஸான், கோவை

நாள்: நவம்பர் 20, 2015

உரை: மௌலவி முஹம்மது இஸ்மாயில் இம்தாதி

இந்த உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்