முஸ்லிமின் முதல் பொறுப்பு தஃவா.!!


ஓர் முஸ்லிம் குடும்பத்தில் பிறந்ததனால் மட்டும் ஓர் மனிதன் தன்னை முஸ்லிம் என்று அடையாளப்படுத்திக் கொள்ளமுடியாது. அதனைத்தாண்டி, அவனது அணைத்து செயல்பாடுகளும் இந்த அகில உலகினையும் படைத்து பரிபாலிக்கும் இறைவனின் கட்டளைகளுக்கிணங்க கீழ்படியும்போதே அவனை முஸ்லிம் என்று இறைவன் தனது திருமறையில் குறிப்பிடுகிறான்.

தான் உணர்ந்த இந்த இறைவனின் மேன்மையினை உலக மக்கள் அனைவருக்கும் அழகிய உபதேசத்தினைக்கொண்டும், அறிவார்ந்த விவாதங்களின் மூலமும், தனது சிறப்பான ஒழுக்க மாண்புகளைக்கொண்டும் உணர்த்துவது இறைநம்பிக்கை கொண்டவரின் கடமையாகும்.

உலக மக்கள் அனைவருக்கும் பொதுவான வாழ்வியல் நெறியான இஸ்லாத்தினை சிறந்த முறையில் பிற மக்களுக்கு எடுத்து வைப்பதன் மூலமே இறையாட்சி எனும் நிலையை அடையமுடியும் என்பதனையும், அழைப்பில் என்பது ஓர் சிலருக்கு மட்டுமின்றி ஒவ்வோர் முஸ்லிமின் மீதான தார்மீகக் கடமை என்பதனையும் விளக்கும் ஜுமுஅ சிறப்புரை.

ஜுமுஅ சிறப்புரை @ மஸ்ஜிதுல் இஹ்ஸான், கோவை

நாள்: நவம்பர் 13, 2015

உரை: மௌலவி முஹம்மது இஸ்மாயில் இம்தாதி

இந்த உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்