Masjidhul Ihsaan - Coimbatore

தலாக்கும் அதன் முறைமைகளும் - Part 1


தற்கால இந்திய சூழலில் முஸ்லிம்களும் அவர்களின் அடிப்படை உரிமையான வாழ்வியல் விவகாரங்களில் இஸ்லாம் கூறும் கோட்ப்படுகளின் அடிப்படையில் செயல்படுவதும் பிற்போக்குத்தனம் என்றும் சமகால வாழ்வியலுக்கு ஒத்துவராத ஒன்றாகவும் பார்க்கப்படுகிறது. ஒரு சில மேற்கத்திய சிந்தனைகொண்ட முஸ்லிம்களும் இதே சிந்தனைகொண்டு இருப்பதும் இன்றைய முஸ்லிம் சமூகத்திற்கு பெரும் சவாலான ஓர் நிலையை உருவாக்கியுள்ளது.

இந்நிலையில் இஸ்லாமிய சமூகம் தங்களது வாழ்வியல் விவகாரங்களில் இஸ்லாமிய ஷரியத்தை முழுவதும் அறிந்துகொள்வதுடன் அதனை தங்களது வாழ்வில் முழுவதுமாக பின்பற்றி நடந்திட வேண்டும். அப்படியான வாழ்வியல் விவகாரங்களில் ஒன்றான மணவிலக்கு எனும் தலாக்கின் இஸ்லாமிய முறைமை குறித்தும் அதனை செயல்படுத்தும் விதம் குறித்தும் விளக்கிடும் ஜுமுஆ தொடர் சிறப்புரையின் முதல் பகுதி.

மஸ்ஜிதுல் இஹ்ஸான் @ கோவை

நாள்: ஏப்ரல் 28, 2017

உரை: மௌலவி முஹம்மது இஸ்மாயில் இம்தாதி

இந்த உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்

முஸ்லிம் தனியார் சட்டமும் நாமும்..!!



இந்திய அரசியல் சாசனம் தந்து குடிமக்களுக்கு வழங்கியுள்ள உரிமைகளில் ஒன்று தங்களது மதம் கூறும் கோட்ப்படுகளின் அடிப்படையில் தங்களது தனியார் சட்டங்களை அமைத்துக்கொள்ளக்கூடிய உரிமையாகும்.

தற்போதைய பஜக அரசு பதவியேற்றது முதல் முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டுள்ள இந்த உரிமையை குறிவைத்து அதனை பறித்திடும் வகையிலும் அதனை மக்களுக்கு எதிரானதாக சித்தரிக்கும் செயல்களிலும் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.

இந்த சூழலில் முஸ்லிம்கள் இந்த தனியார் சட்டங்கள் குறித்து சமூகம் முழுக்க விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன் அந்த சட்டங்களை மதித்து தமது வாழ்வியலில் முழுமையாக செயல்பாட்டில் கொண்டுவந்திட முயற்சிகள் மேற்கொள்ளவேண்டும் என்பதை விளக்கும் ஜுமுஆ சிறப்புரை.

மஸ்ஜிதுல் இஹ்ஸான் @ கோவை

நாள்: ஏப்ரில் 21, 2017

உரை: மௌலவி முஹம்மது இஸ்மாயில் இம்தாதி

இந்த உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்

சமூகப்பொறுப்புணர்வும் தலைமையும்..!!



இந்திய முஸ்லிம் சமூகம் சந்தித்துவரும் பலவிதமான எதிர்ப்புகளுக்கும் அடக்குமுறைகளுக்கும் நமது செயல்பாடுகள் எவ்வாறு அமைந்திட வேண்டும் என்பதை கடந்த வார ஜுமுஆ உரையின் தொடர்ச்சியாக, நம் சமூக தலைவர்கள் தங்களது செயல்பாட்டினை எவ்வாறு அமைத்துக்கொள்ள வேண்டும் என்பதனை விளக்கும் சிறப்புரை.

மஸ்ஜிதுல் இஹ்ஸான் @ கோவை

நாள்: ஏப்ரில் 14, 2017

உரை: மௌலவி முஹம்மது இஸ்மாயில் இம்தாதி

இந்த உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்

சமூகப்பொறுப்புணர்வும் நாமும்..!!


இந்திய முஸ்லிம் சமூகம் சந்தித்துவரும் பலவிதமான எதிர்ப்புகளுக்கும் அடக்குமுறைகளுக்கும் நமது செயல்பாடுகள் எவ்வாறு அமைந்திட வேண்டும் என்பதை விளக்கிடும் ஜுமுஆ சிறப்புரை.

மஸ்ஜிதுல் இஹ்ஸான் @ கோவை

நாள்: ஏப்ரில் 7, 2017

உரை: மௌலவி முஹம்மது இஸ்மாயில் இம்தாதி

இந்த உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்

https://drive.google.com/file/d/0B7o0wyRQOYOeV2RMVnBBOTFwV0U


விமர்சனங்களுக்கான பதில் நற்குணத்தை கொண்டு..!!



பன்னெடுங்காலமாக இஸ்லாம் மீதும் இஸ்லாமிய சமூகம் மீதும் எழுப்பப்படும் பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கும் வசைகளுக்கும் இஸ்லாமிய சமூகம் பல்வேறான முறைகளில் எதிர்வினையாற்றி வந்திருக்கிறது. அது, உணர்ச்சிவசப்பட்டு வன்முறைகளில் ஈடுபடுதல் முதல் திரும்ப தரம்தாழ்ந்த வசைகளை கொடுப்பதுவரை என பல வகையில் அமைந்துள்ளது.

இந்நிலையில், நபிகளார் (ஸல்) அவர்கள் மீதான அல்லது இஸ்லாம் மீதான விமர்சனங்களுக்கான அவர்களது எதிர்வினை அவரது நல்லொழுக்கம் மற்றும் நற்குணத்தை கொண்டே பதில் வழங்கினார். அதனை பின்தொடர்ந்தே இஸ்லாமிய சமூகமும் நற்குணத்தையும் ஒழுக்க விழுமியங்கள் கொண்டே விமரசனங்களுக்கான பதில்களை வழங்கிட வேண்டும் என்பதை விளக்கும் ஜுமுஆ சிறப்புரை.

மஸ்ஜிதுல் இஹ்ஸான் @ கோவை

நாள்: மார்ச் 31, 2017

உரை: மௌலவி முஹம்மது இஸ்மாயில் இம்தாதி

இந்த உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்

https://drive.google.com/file/d/0B7o0wyRQOYOeRE1qNlZudXI5M0k