தூக்கில் ஏற்றப்பட்ட நீதி.. ! !சென்ற வாரம், ஜூலை 30, 2015 அன்று 1994-ஆம் ஆண்டும் நிகழ்ந்த மும்பாய் குண்டுவெடிப்புக்கு உதவி செய்தவர் என்று கூரி யாகூப் மேமன் தூக்கிலிடப்பட்டார்.இவரது ஒரே குற்றம் அவர் நிழலுலக தாதா தாவூத் இப்ராஹிமின் கூட்டாளி டைகர் மேமனின் சகோதரன் என்பதே. இதனையே யாகூப் மேமன் தனது கடைசி அறிக்கையிலும்,

என்னை டைகர் மேமனின் சகோதரன் என்பதற்காக தூக்கிலிடுங்கள் அதனை நான் ஏற்றுக்கொள்கிறேன், அனால் மும்பை குண்டுவெடிப்புக்கு தொடர்புடையவன் என்று கூரி என்னை தூக்கிலிடுவதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறியிருந்தார்.

அவரை முதல் முதலில் பத்திரிக்கைக்காக பேட்டி கண்ட முன்னணி பத்திரிக்கயான தி கார்டியன்-னில் பணியாற்றும் பத்திரிக்கையாளரிடமும் தான் நிரபராதி எனவும் அதனை நிரூபிப்பதற்காகவே வெளிநாட்டிலிருந்து இங்கே மீண்டும் வந்தேன் என்று கூறியுள்ளார்.

இது அனைத்திற்கும் மகுடமாக யாகூப் மேமனை நேபாளத்திலிருந்து அழைத்து வந்த ராமன் என்ற மத்திய அரசின் உளவுத்துறையான ரா அமைப்பின் அப்போதைய தலைவர், யாகூப் மேமனுக்கு தூக்கு நீதிக்கு எதிரானது என்று தனது பத்திரிக்கைக்குறிப்பில் எழுதினார். யாகூப் மேமனை ஓர் சிலரின் அரசியல் லாபத்திற்காக குண்டுவெடிப்பில் இறந்தவர்களுக்கான நீதி எனக்கூறி அவசர அவசரமாக தூக்கில் ஏற்றியது பலதரப்பினரிடையேயும் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது என்பதனையும், யாகூப் மேமன் மூலமாகவே குண்டுவெடிப்பு குற்றவாளிகளுக்கு எதிராகவும் பாகிஸ்தானின் உளவு அமைப்பிற்கு எதிராகவும் திரட்டிய சாட்சியங்களைக்கொண்டு இந்த வழக்கினில் குற்றமிளைத்தவர்களை அனைவரது கவனத்திற்கும் கொண்டுவந்த அவரையே தூக்கில் ஏற்றிய வஞ்சகத்தினக் குறித்தும் விளக்கும் ஜூமுஅ சிறப்புரை.

ஜுமுஅ சிறப்புரை @ மஸ்ஜிதுல் இஹ்ஸான், கோவை

நாள்: ஆகஸ்ட் 8, 2015

உரை: மௌலவி முஹம்மது இஸ்மாயில் இம்தாதி


இந்த உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்