Masjidhul Ihsaan - Coimbatore

சமூகமும் அறிஞர்களின் நிலையும்..!!


இந்தியாவில் அதுவும் குறிப்பாக தமிழகத்தில் இஸ்லாமிய சமூகம் எவ்வாறான கருத்தோட்டங்களையும் செயல்பாடுகளையும் மேற்கொண்டுள்ளது என்பதை ஆராய்ந்தால், அது இந்த சமூகத்தில் விரிசல்களை பிளவுகளாக மாற்றவும் மேலும் பல்வேறான கருத்துவேறுபாடுகளை முன்னெடுக்கவுமே வழிவகுத்துள்ளது.

இவ்வாறான கருத்துவேறுபாடுகளில் இந்த சமூகத்தை உழலச் செய்வதில் முக்கிய பங்கு இந்த சமூகத்தின் அறிஞர் பெருமக்களையே சாரும். தீமைகள் வேரோடிப்போன சமூகத்தில் இஸ்லாமிய மரபின்படியும் இஸ்லாம் வழங்கியுள்ள வழிமுறைகளின்படியும் நன்மையை ஏவுதல் மற்றும் தீமையை தடுப்பதும் மார்க்கக் கடமை என்பதை அவர்கள் அறிந்திருந்தும், அதனை செயல்படுத்தாமல் கண்டும் காணாமல் தீமைகளுக்கு சாட்சிகளாக மாறிப்போனது சமூக அவலம்.

சமூகத்தில் மார்க்க அறிஞர்களின் கடமை மற்றும் அவர்களது தற்போதைய நிலைகளைக் குறித்து சிந்தனையைத்தூண்டும் ஜுமுஅ சிறப்புரை.

ஜுமுஅ சிறப்புரை @ மஸ்ஜிதுல் இஹ்ஸான், கோவை

நாள்: மார்ச் 4, 2016

உரை: மௌலவி முஹம்மது இஸ்மாயில் இம்தாதி

இந்த உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்

https://drive.google.com/file/d/0B7o0wyRQOYOeV3laRDV3TjVfTTQ/view