முஸ்லிம்களின் தலையாய பணி எது ?
இறைவன் மனிதனை படைத்து அவனுக்கு நேரிய வழிகாட்டுதல்களை வழங்கி, இறுதியில் சுவனத்திற்கு தகுந்தவனாக மாற்றிடும் ஓர் தேர்வுக்கான இடமாக இந்த உலகினை ஏற்படுத்தியுள்ளான்.


இறைவன் இந்த பிரபஞ்சத்தையும் மனிதனையும் படைத்த நோக்கத்தை விளக்கிடவும், மனிதகுலத்திற்கு மறுமை வெற்றிக்கான வழிகாட்டுதல்களை வழங்கிடவும் அவனால் அனுப்பப்பட்ட பல்வேறு தூதர்களும் மேற்கொண்ட பணி, இன்று முடங்கிப்போய் சிறு குழுக்களால் மேற்கொள்ளப்படுவரும் நிலையை காணமுடிகிறது.

இறைவனைக்குறித்தும் அவனது மார்க்கத்தைக்குறித்தும் அறிந்திராத அல்லது தெளிவில்லாத நம் சக மனிதர்களிடம் இந்த நேரிய வழியினை எடுத்துரைக்கவேண்டியது தனிமனிதக் கடமை என்றில்லாமல் ஒட்டுமொத்த சமூகத்தின் கடமையாகும், இதனையே நபி (ஸல்) அவர்களும் அவர்களது தூதர்களும் தலையாய பணியாக மேற்கொண்டனர் என்பதை விளக்கும் ஜுமுஅ சிறப்புரை.

ஜுமுஅ சிறப்புரை @ மஸ்ஜிதுல் இஹ்ஸான், கோவை

நாள்: டிசம்பர் 18, 2015

உரை: சகோதரர் அன்வர்

இந்த உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்