Masjidhul Ihsaan - Coimbatore

மதுவும் முஸ்லிம் உம்மதின் கடமையும்..!!


நம் தமிழ்நாட்டில் எங்கும் வியாபித்து அனைவரையும் அடிமைகளாய் சிந்தனை சிதைந்தவர்களாய் மற்றும் கொடிய அரக்கனாகிய மதுவை அரசே முன்னின்று நடத்திவரும் சூழலில். இன்று வெகு சிறுபான்மை முஸ்லிம்களும் அதன் கோரப்பிடியில் தங்களையும் அறியாமல் சிக்குண்டு கிடக்கிறார்கள்.

மதுவைக் குறித்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகையில் “மது தீமைகளின் தாய்” என்றார். அதனையே ஷைத்தானின் வழிகெடுக்கும் ஆயுதங்களான நான்கில் மது பிரதானமானது, எனவே அதிலிருந்து விளகியிருப்பவரே இறுதியில் வெற்றி பெற்றவர் என இறைவன் திருக்குர்ஆனில் கூறுவதையும் கொண்டு மனித குலம் மொத்தத்திற்கும் இம்மையிலும் மறுமையிலும் கேட்டினை விளைவிக்கக்கூடியது மது என்பதை உணரலாம்.

இத்தகைய சமூக பாதிப்பினை தடுத்து ஒட்டுமொத்த மக்களையும் நன்மையின் பால் அழைப்பதே முஸ்லிம் உம்மதின் தலையாய கடமை என்பதை விளக்கும் ஜுமுஅ சிறப்புரை.

ஜுமுஅ சிறப்புரை @ மஸ்ஜிதுல் இஹ்ஸான், கோவை

நாள்: அக்டோபர் 9, 2015

உரை: மௌலவி முஹம்மது இஸ்மாயில் இம்தாதி

இந்த உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்