நட்பில் முக்கியத்துவம் எதற்கு..?

தற்போதைய நவீன யுகத்தில் ஓர் மனிதர் இன்னொருவருடன் நடுப்பு கொள்ளும்போது அங்கு அவரது சமூக அந்தஸ்து, பொருளாதாரம், அவர் வகிக்கும் பதவி, அவரக்கு சமூகம் வழங்கக்கூடிய முக்கியத்துவம் ஆகியவற்றினைப் பொருத்து அமைவதை நாம் காண்கிறோம்.இறைத்தூதர் நபி (ஸல்) அவர்கள் கட்டமைத்த அந்த முஸ்லிம் சமூகத்தில் இதற்க்கு நேர் எதிராக ஒருவருடைய பொருளாதாரம் மற்றும் சமூக அந்தஸ்துகளை விடுத்து அவரது ஈமான் மற்றும் இஸ்லாத்தின் மேல் அவர் கொண்டுள்ள நேசத்தின் அடிப்படையிலேயே அமைந்தது.

இன்றைய கால சூழலில் இஸ்லாமிய மரபை பின்பற்றும் நபரை தங்கள் சுய விருப்பத்திற்கும் கட்டுப்பாடற்ற சுதந்திரத்திற்கும் நெருக்கடி வரக்கூடும் என்பதற்காக அவரிடமிருந்து மற்றவர்கள் விலகியிருப்பதை காணமுடிகிறது. ஆனால் நட்புகொள்ளும்போது கூட இன, மொழி, பண்பாடு, பொருளாதாரம், அந்தஸ்து என்கிற அனைத்து மாச்சரியங்களை புறம்தள்ளி இறைவனின் மீதுள்ள ஈமானை முன்னிருத்தி நட்பு பாராட்டவேண்டும் என்பதை விளக்கும் ஜுமுஅ சிறப்புரை.

ஜுமுஅ சிறப்புரை @ மஸ்ஜிதுல் இஹ்ஸான், கோவை

நாள்: செப்டம்பர் 25, 2015

உரை: மௌலவி முஹம்மது இஸ்மாயில் இம்தாதி

இந்த உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்