Masjidhul Ihsaan - Coimbatore

மறுமை சிந்தனை மேலோங்கிட.!!



உலகில் வாழும் பல்வேறு வகையான நம்பிக்கை கொண்ட மக்களில் மிகவும் குறைவான குற்ற செயல்கள் காணப்படுவது இஸ்லாமிய சமூகத்தில்தான் என்பது நிதர்சனமான உண்மை. அதன் காரணம் தங்களையே அறியாமல் இஸ்லாம் அவர்களின் உள்ளத்தில் புகுத்தியிருக்கும் மறுமை மற்றும் அதனை சார்ந்த இறைவனின் தீர்ப்பு ஆகிவற்றில் முஸ்லிம்கள் கொண்டுள்ள உறுதியான நம்பிக்கையை இது உணர்த்துகிறது.

மனிதனிடம் தனது செயல்களுக்கு இறைவன் முன் கணக்கு காட்டவேண்டிய நாள் வரும் என்ற நம்பிக்கை குறையும்போதோ அல்லது அதன் மேல் நம்பிகையற்று இருக்கும் சூழலில் அவன் யாருக்கும் அஞ்சாது தனது மனம்போனபோக்கில் தனது வாழ்வில் பயணிக்கிறான். இதனால் தனது செயல்கள் எவ்வளவு தீமையானதாக இருந்தாலும் அதனைப்பற்றி அவன் எந்தவித கவலையும் கொள்வதில்லை..

ஓர் இறையடியான் இப்படிப்பட்ட மனநிலையிலிருந்து விலகி எப்போதும் மறுமை குறித்தும் அந்நாளில் இறைவனுக்கு தனது செயல்களுக்கான கணக்கை சமர்ப்பிக்கவேண்டிய அவசியம் உள்ளவனாகவே இருக்கிறான் என்பதை மனதில் ஆழமாகப்பதிந்து அதனடிப்படையில் செயல்படுபவனாகவே இருக்கிறான்.

அப்படி மனதில் எல்லா நேரத்திலும் மறுமை சிந்தனை மேலோங்கிட மேற்கொள்ளவேண்டிய வழிமுறைகளை விளக்கிடும் ஜுமுஆ சிறப்புரை.

ஜுமுஅ சிறப்புரை @ மஸ்ஜிதுல் இஹ்ஸான், கோவை

நாள்: டிசம்பர் 16, 2016

உரை: மௌலவி முஹம்மது இஸ்மாயில் இம்தாதி

இந்த உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்


மரணம் கற்றுத்தரும் பாடம்.!!



மனிதன் இறைநம்பிக்கை கொண்டவனாக இருந்தாலும் அல்லது இறைமருப்பில் இருந்தாலும், மனித குலம் முழுவதும் ஒப்புக்கொள்ளும் ஒரு மகத்தான உண்மை உலகத்தில் பிறக்கும் எல்லா உயிரும் மரணத்தை சுவைத்தே தீரவேண்டும் என்பதேயாகும்.

மரணம் குறித்து இறைவன் தனது திருமறையில் தெளிவாக விளக்குவதுடன், மரணத்தின் மூலம் நிரந்தர வாழ்கையை மனிதன் துவங்குகிறான் என்றும் அதனை வெற்றி அல்லது தோல்வியில் முடிவது ஒவ்வொரு மனிதனின் உலகியல் செயல்பாடுகளைக்கொண்டே அமையும் என்பதையும் விளக்குகிறது.

ஒரு மனிதனின் மரணத்தறுவாய் மற்றும் அதற்குப்பின் நிகழும் நிகழ்வுகளையும் விளக்கிடும் ஜுமுஆ சிறப்புரை.

ஜுமுஅ சிறப்புரை @ மஸ்ஜிதுல் இஹ்ஸான், கோவை

நாள்: டிசம்பர் 9, 2016

உரை: மௌலவி முஹம்மது இஸ்மாயில் இம்தாதி

இந்த உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்



சுய ஒழுக்கம்-சமூக மாற்றத்தின் முதல் படி.!!


சமூகத்தில் சீர்திருத்தம் மற்றும் மாற்றத்தை விதைத்திட விரும்புபவர் முதலில் கொள்ளவேண்டிய பண்பு சுய ஒழுக்கம். சீர்திருத்தத்தை மேற்கொள்பவர் அப்பழுக்கற்ற ஒழுக்க நலன்களை தன்னுள் கொண்டவராகவும் மக்களிடம் தனது ஒழுக்க மாண்புகளால் மதிக்கப்படுபவராகவும் இருத்தல் இன்றியமையாத ஒன்று.

அவ்வாறே இறைவனின் தூதர்கள் ஒவ்வொருவரும் தங்களது இறைத்தூதை மக்களின் முன்வைப்பதற்கு முன்பே அவர்களது ஒழுக்க குணநலன்கள் குறித்து அந்த மக்கள் நன்கு அறிந்தவர்களாகவே இருந்திருக்கிறார்கள்.

சமகால சமூக சீர்கேடுகளின் ஊடே சீர்த்திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றால் அந்த சீர்திருத்ததை முன்னேடுப்பவர்களான இறைத்தூதை சமர்ப்பிக்கும் பொறுப்பு சாட்டப்பட்ட முஸ்லிம்கள் எவ்வாறான குணநலன்களை கொண்டவர்களாக இருக்க வேண்டும் என்பதை விளக்கிடும் ஜுமுஆ சிறப்புரை.

ஜுமுஅ சிறப்புரை @ மஸ்ஜிதுல் இஹ்ஸான், கோவை

நாள்: நவம்பர் 25, 2016

உரை: மௌலவி முஹம்மது இஸ்மாயில் இம்தாதி

இந்த உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்



நவீன பிர்அவுனியம்.!!



கடந்த நவம்பர் 8, 2016 இரவு முதல் சாமானிய இந்திய மக்களுக்கு பேரிடியாய் வந்திறங்கிய 500-1000 ரூபாய் நோட்டுகள் பயன்படாது என்றும் அந்த நோட்டுகளை வங்கிகளில் செலுத்தி புதிய நோட்டுகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் ஓர் தான்தோன்றித்தனமான மக்கள் மீது எவ்வித கருணையுமின்றி செய்யப்பட அந்த அறிவிப்பால் மக்கள் தினம்தோறும் அலைக்கழிக்கப்பட்டு வருகிறார்கள்.

மக்கள் நலன் மீது சிறுதும் அக்கறையில்லாத இந்த செயல் ஓர் மனநோயாளி எப்படி அடுத்தவர் படும் துன்பத்தைக் கண்டு ரசிப்பானோ அதுபோன்ற ஓர் மனநிலை தான் இந்த மத்திய அரசு கொண்டுள்ளது என்பதை தெளிவுபடுத்துகிறது.

இறைவன் திருமறையில் பிர்அவுனின் ஆட்சியைக்குறித்து குறிப்பிடும் போதும் இதுபோன்ற மக்களை சுரண்டிக்கொளுக்கக்கூடிய செயலில் அவன் ஈடுபட்டதையும் அதனை எதிர்த்து மூஸா நபி அவர்கள் போராடி இறைவனின் பேருதவியால் அவனை வென்ற வரலாற்றை காண முடிகிறது. இதுபோன்ற நவீன பிர்அவுனிய ஆட்சியில் முஸ்லிம்களின் செயல்பாடு எவ்வாறு இருக்க வேண்டும் என்பதைக் குறித்து விளக்கிடும் ஜுமுஆ சிறப்புரை.

ஜுமுஅ சிறப்புரை @ மஸ்ஜிதுல் இஹ்ஸான், கோவை

நாள்: நவம்பர் 11, 2016

உரை: மௌலவி முஹம்மது இஸ்மாயில் இம்தாதி

இந்த உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்


ஷரியத்தும் ஜாஹிலியத்தும்..!!


இந்திய போன்ற பன்மைச்சமூகத்தில் ஜாஹிலியத்தின் பிடி ஓங்கும்போது முஸ்லிம்களின் வாழ்வியலுக்கு மிகுந்த நெருக்கடியான நிலை ஏற்படக்கூடிய சாத்தியம் அதிகம். அதிலும், பாசிஸ கொள்கை நாடாளும்போது, நபியவர்களும் அவரது தோழர்களும் மக்க மாநகரில் எவ்வித நெருக்கடிக்கு உட்படுத்தப்பட்டனரோ அதனை பிரதிபலிக்கும் விதமாகவே இந்திய முஸ்லிம் சமூகம் உட்படுத்தப்படும் நெருக்கடிகள் அமைந்துள்ளது.

நிலைமை இவ்வாறு இருக்க முஸ்லிம்கள் இந்த ஜாஹிலியத்தை எவ்வாறு எதிர்கொள்ளவேண்டும் அதற்கான அத்தியாவசிய தேவை குறித்தும் விளக்கிடும் ஜுமுஆ சிறப்புரை.

ஜுமுஅ சிறப்புரை @ மஸ்ஜிதுல் இஹ்ஸான், கோவை

நாள்: நவம்பர் 4, 2016

உரை: மௌலவி முஹம்மது இஸ்மாயில் இம்தாதி

இந்த உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்

https://drive.google.com/open?id=0B7o0wyRQOYOeTTg4a3Z6YlllQ2c


முத்தலாக் - சர்ச்சைகளும் தீர்வுகளும்..!!


உத்திரப்பிரதேச மாநில தேர்தலை குறிவைத்து மக்களை மத ரீதியாக பிரிப்பதர்க்காகவே மத்திய பஜக அரசு கையில் எடுத்திருக்கும் ஆயுதம் இஸ்லாமிய தனியார் சட்டத்தில் ஒன்றான முத்தலாக்.

இஸ்லாம் நம்பிக்கையாளர்களுக்கு வழங்கியுள்ள வாழ்வியல் சட்டங்களில் மிகவும் வெறுக்கத்தக்க ஒன்றாக கருதப்பட்டாலும் ஓர் சில தவிர்க்க முடியாத தருணங்களில் பயன்படுத்திடவே இத்தகைய சட்டங்களை மிகுந்த கட்டுப்பாடுகளுடன் வழங்கப்பட்டுள்ளது.

இஸ்லாமிய திருமணம் மற்றும் விவாகரத்து சட்டங்களை முதலில் முஸ்லிம்கள் சரியாக புரிந்துகொண்டு அதனை நடைமுறைப்படுத்த முற்படும்போது அதன் பயன்களை பிற சமூக மக்களுக்கு முன்னுதாரணமாக விளங்கிடவும் கூடும்.

முத்தலாக் குறித்த இஸ்லாமிய சட்ட விளக்கம் மற்றும் இதன் சட்டங்களை சீர்திருத்தம் செய்யவேண்டிய தேவை குறித்தும் அதற்க்கான தீர்வுகளையும் விளக்கிடும் ஜுமுஆ சிறப்புரை.

ஜுமுஅ சிறப்புரை @ மஸ்ஜிதுல் இஹ்ஸான், கோவை

நாள்: அக்டோபர் 28, 2016

உரை: மௌலவி முஹம்மது இஸ்மாயில் இம்தாதி

இந்த உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்




ஷரியத்-பொது சிவில் சட்டம்..!!



மத்திய பஜக அரசு இந்திய அரசியல் சாசனம் வழங்கியுள்ள அடிப்படை உரிமையான மத அடிப்படையில் தங்களது வாழ்வியல் விவகாரங்களை அமைத்துக்கொள்ளவும் அதனை பிரசாரம் செய்வதற்குமான உரிமையை பறிக்கும் வகையில் இந்திய மக்கள் அனைவருக்கும் ஒரே மாதிரியான சிவில் சட்டம் கொண்டுவருவதில் முனைப்பு காட்டிவருகிறது.

இதனை சாத்தியப்படுத்தும் நோக்கில் தான் முஸ்லிம் பெண்களுக்கு நிகழ்த்தப்படும் அநீதி என்ற கூக்குரலுடன் முத்தலாக் விவகாரத்தை பூதாகரமாக்க முனைகிறது.

இப்படிப்பட்ட சூழலில், பொது சிவில் சட்டம் குறித்த பல முக்கியமான கேள்விகளுக்கான விடை பெறுவதாகவும், முஸ்லிம் சமூகத்தில் இஸ்லாமிய தனியார் சட்டத்தின் இன்றியமையாத தன்மையை விளக்கிடும் ஜுமுஆ சிறப்புரை.

ஜுமுஅ சிறப்புரை @ மஸ்ஜிதுல் இஹ்ஸான், கோவை

நாள்: அக்டோபர் 21, 2016

உரை: மௌலவி முஹம்மது இஸ்மாயில் இம்தாதி

இந்த உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்


தியாகத் திருநாள் சிறப்புரை..!!







சீர்திருத்தம் என்பது எங்கிருந்து துவங்கிட வேண்டும் என்பதையும், இறைவனது வழிகாட்டுதலை ஒட்டி அது நிகழ்வதன் அவசியத்தையும் விளக்கும் தியாகத் திருநாள் சிறப்புரை.

@ இஸ்லாமியாஹ் மெட்ரிக் பள்ளி, கோவை

நாள்: செப்டம்பர் 13, 2016

உரை: மௌலவி முஹம்மது இஸ்மாயில் இம்தாதி

இந்த உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்

https://drive.google.com/file/d/0B7o0wyRQOYOebGFCU0tTSzVpWUE/view?usp=sharing

படிப்பினைகளும் செயல்பாடுகளும்.!!







கோவை மாநகரில் 1998-ஆம் ஆண்டு நடந்த சமூக அவலங்களையும் அதன் விளைவுகளினால் ஒட்டுமொத்த நகரமே அதன் அமைதி, உயிர், பொருளாதாரம் மற்றும் பல்வேறான இழப்புகளை சந்தித்தது.

அந்த இழப்புகளின் வடுக்கள் மறைந்து சமூகம் அமைதிபெறும் சூழல் நிகழும் இந்த தருணத்தில், மீண்டும் அதே போன்றதொரு இறுக்கமான சூழல் இன்று காலை முதல் கோவை நகரில் சில குழுக்களினால் கட்டமைக்கப்பட்டு வருகிறது. இந்த சூழலில் இறை நம்பிக்கைகொண்ட முஃமின்கள் எவ்வாறான செயல்பாடுகளை மேற்கொள்ளவேண்டும் என்பதையும், உணர்ச்சிவசப்பட்டு எந்தவித தவறான செயல்பாடுகளிலும் ஈடுபடத் தேவையில்லை என்பதையும் விளக்கும் ஜுமுஆ சிறப்புரை.

ஜுமுஅ சிறப்புரை @ மஸ்ஜிதுல் இஹ்ஸான், கோவை

நாள்: செப்டம்பர் 23, 2016

உரை: மௌலவி முஹம்மது இஸ்மாயில் இம்தாதி

இந்த உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்


சூரா அல்-அஸ்ர் விளக்கவுரை..!!


கோவை மஸ்ஜிதுல் இஹ்ஸானில் ஞாயிறு தோறும் மஹ்ரிப் தொழுகைக்குப்பின் குர்ஆன் விளக்கவுரை நிகழ்த்தப்பட்டு வருகிறது.

இந்த வாரம் சூரா அல்-அஸ்ர் (அத்தியாயம் 103)-ன் விளக்கவுரை நிகழ்த்தப்பட்டது.

உரை:  மௌலவி. முஹம்மது இஸ்மாயில் இம்தாதி

நாள்: ஆகஸ்ட் 14, 2016

உரையை கேட்க்க கீழுள்ள லிங்கை சொடுக்கவும்..


பொது சிவில் சட்டமும் முஸ்லிம்களின் கடமையும்-081216..!!



இந்திய தேசிய அளவிலான மக்கள் அனைவருக்கும் பொதுவான சிவில் சட்டத்தினை வடிவமைப்பதற்கான சாத்தியங்கள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என தேசிய சட்ட கமிஷனுக்கு மத்திய பஜக அரசு ஆணை பிறப்பித்துள்ள சூழலில். சங்பரிவார்கள் பொது சிவில் சட்டம் என எதனை முன்வைக்கிறார்கள் என்பதை கவனத்தில் கொண்டால், இவ்வாறான சட்டம் கொண்டு வருவதன் மூலம் சமூக அளவில் அடித்தட்டில் இருக்கும் தாழ்த்தப்பட்ட மற்றும் சிறுபான்மை மக்களுக்கு இந்திய அரசியல் சாசனம் வழங்கியுள்ள அடிப்படை உரிமையை பிடுங்குவதாகவே அமையும் என்பதை உணரமுடிகிறது.

இந்த சூழலில் பொது சிவில் சட்டம் குறித்து தெளிவான கருத்தியலை உருவாக்குவதும் மேலும் இஸ்லாமிய ஷரியத்தை பின்பற்ற நமது அரசியல் சாசனம் வழங்கியுள்ள அடிப்படை உரிமையை பாதுகாத்திட முஸ்லீம்கள் மேற்க்கொள்ளவேண்டிய பணிகளின் அத்தியாவசிய தேவையை உணர்த்தும் சிந்தனையைத் தூண்டும் ஜுமுஆ தொடர் உரையின் நான்காம் பாகம்.

ஜுமுஅ சிறப்புரை @ மஸ்ஜிதுல் இஹ்ஸான், கோவை

நாள்: ஆகஸ்ட் 12, 2016

உரை: மௌலவி முஹம்மது இஸ்மாயில் இம்தாதி

இந்த உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்