Masjidhul Ihsaan - Coimbatore

சிரியா படுகொலைகளும் முஸ்லிம் சமூகமும்..!!


கடந்த 2011-ஆம் ஆண்டு  முதல் அரபு வசந்தத்தின் நீட்சியாக சிரியாவில் மக்கள் புரட்சி ஆளும் கொடுங்கோல் சர்வாதிகாரிக்கு எதிராக நடந்து வருகிறது. அங்கு நடக்கும் போருக்கான காரணிகளாக ஆதிக்க நாடுகளின் தலையீடு, வளங்களை சுரண்டுவதற்கான போர் என பல வகையாக சொல்லப்பட்டாலும், இதற்கான ஒரே முழுமுதல் காரணம் இனஅழிப்பு என்ற ஒற்றை வார்த்தையில் அடங்கிவிடும்.

சர்வதேச போர் வரைமுறைகள் மற்றும் மனிதநேய அடிப்படையில் கூட வகைப்படுத்த முடியாத அனைத்து வித காட்டுமிராண்டித்தனமாகவும், ஆதிக்க மனப்பான்மையின் வெளிப்பாடாகவுமே இந்த படுகொலைகள் அமைந்துள்ளது. அதிலும் குறிப்பாக, குழந்தைகள் மற்றும் பெண்கள் தாக்கப்படுவது என்றில்லாமல் மருத்துவமனைகளும் பள்ளிகளும் அடியோடு  தரைமட்டமாக்கப்பதுவதன் மூலம் மக்கள் எவ்வித மறுவாழ்வும் பெற்றுவிடக்கூடாது என்பதில் இந்த கொடியவர்கள் திட்டமிட்டு தாக்கி வருகிறார்கள்.

இந்நிலையில், உலகளாவிய வகையில் பரவியிருக்கும் இஸ்லாமிய சமூக மக்கள் இந்த நிகழ்வை எவ்வாறு கருத்தில் கொள்ளவேண்டும் என்பதனையும் இதற்கான தீர்வுகளை நோக்கி முஸ்லிம்கள் எவ்வாறாக செயல்படவேண்டும் என்பதை விளக்கிடும் ஜுமுஆ சிறப்புரை.

உரை: மௌலவி. முஹம்மது இஸ்மாயில் இம்தாதி

நாள்: மார்ச் 2, 2018

@ மஸ்ஜிதுல் இஹ்ஸான், கோவை

இந்த உரையினை கேட்கவும் பதிவிறக்கம் செய்திடவும் கீழுள்ள சுட்டியை சொடுக்கவும்...