தண்ணீர் சேமிப்பு..!!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
நமது பள்ளியில் தொழுகைக்காக ஒழுசெய்ய மட்டும் வாரம் சுமார் 10,000 லிட்டர் தண்ணீர் பயன்படுத்தபடுகிறது
கோவையில் 100 பள்ளிகளுக்கு மேல் உள்ளது சுமார் ஒருநாளைக்கு 10 லட்சம் லிட்டர் தண்ணீர் கோவை நகர் பகுதிகளில் ஒழுசெய்யபட்ட தண்ணீர் சாக்கடையில் கலந்து கொண்டு இருக்கிறது
தற்போதய வறட்சியால் நகர் பகுதி பள்ளிவாசல்களில் ஒழு செய்ய கூட தண்ணீர் இல்லமால் தண்ணீர் வெளியே விலைக்கு வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனால் பள்ளி நிர்வாகத்தினரும், பொது மக்களும் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்நிலை நம் பகுதிகளிலும் ஏற்பாடாமல் இருக்கவும், கோடை கால வறட்சியை சமாளிக்கவும், நாம் கோவை மாநகரின் நீர் ஆதாரத்தை பாதுகாக்கவும், நாம் முன்னேற்பாடுகளை செய்ய வேண்டியுள்ளது.
அந்த வகையில், நம் பள்ளியில் ஒழுசெய்யும் தண்ணீரை பூமிக்கு அடியில் செலுத்துவதால் நம் பகுதியின் நீர்மட்டம் உயரும். நம் பள்ளிவாசலில் இவ்வகையில் 5 அடி விட்டதில், 12 அடி ஆழத்தில் இரண்டு பெரிய குழிகள் தோண்டப்பட்டு அதில் நீரை சுத்தம் செய்ய (RAIN WATER HARVESTING SYSTEM) RWH சுத்திகரிப்பு முறையில் தேவையான கற்கள், இன்னும் அதற்க்கு தேவையான பொருள்களை இட்டு வேலை நடைபெற்று வருகின்து. இதனால் நம் சுற்றுவட்டார பகுதிகள் முழுவதும் நிலத்தடி நீர் மட்டம் உயரும்.
கோவையில் முதல் முறையாக ஒழு செய்யும் தண்ணீரை சேகரிக்கும் முறை நம் பள்ளியில் துவங்கி உள்ளோம்.
இறைவனின் அருட்கொடையான நீரை சாக்கடையில் கலந்து விரயம் ஆகாமல் மீண்டும் அந்த நீரை மக்களின் பயன்பாடிற்க்கும், பள்ளியின் பயன்பாடிற்க்கும் தூய்மையாக வழங்கும் முயற்சியில் நமது ஜமாஅத் முயற்சி எடுத்துள்ளது.
அடுத்தக்கட்ட முயற்சியாக கோவை கரும்புக்கடை மஸ்ஜிதுல் ஹுதா, ஒப்பணகார வீதி அத்தார் ஜமாஅத் பள்ளிவாசல், RS புரம் குர்ரதுல் அயன் பள்ளிவாசல்களில் தண்ணீர் சேகரிப்பு தொட்டி அமைக்கும் முயற்சி விரைவில் ஆரம்பிக்கப்பட உள்ளது
இந்த தண்ணீர் சேகரிப்பு முறை கோவையில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


இப்படிக்கு,

மஸ்ஜிதுல் இஹஸான் நிர்வாகம்
தினமலர் வலைதளத்தில் ஒளிபரப்பப்பட்ட காணொளி...
http://www.dinamalar.com/video_main.asp?news_id=92367&cat=32