Masjidhul Ihsaan - Coimbatore

சமூகத்தின் தற்கால நோய்..!!


“(நபியே!) நீர் கூறும்: “உங்களுக்கு மேலிருந்தோ, உங்களின் கால்களுக்குக் கீழேயிருந்தோ ஏதேனுமொரு வேதனையை உங்கள்மீது இறக்கவும், அல்லது உங்களைப் பல்வேறு கூட்டங்களாகப் பிரித்து, உங்களில் ஒரு கூட்டத்தார் கொடுக்கும் துன்பத்தை மற்றொரு கூட்டத்தார் சுவைக்கும்படிச் செய்யவும் அவன் ஆற்றலுள்ளவன்.” பாருங்கள்! அவர்கள் உண்மையை உணரும் பொருட்டு நம் சான்றுகளை எவ்வாறெல்லாம் மீண்டும் மீண்டும் அவர்கள் முன் எடுத்து வைத்துக் கொண்டிருக்கிறோம்.”       -- அல் குர்ஆன் (6:65)

தமிழகம் முதல் சர்வதேச அரங்கு வரை இந்த சமூகத்தை இன்றளவும் பீடித்து அதன் நாடி நரம்புகளை ஆட்கொண்டிருக்கும் நோய் சித்தாந்த அடிப்படையில் பிளவுபட்டுக்கிடப்பதும் அதன் அடிப்படையாலேயே ஒருவர் மற்றவரை இழிவுபடுத்த எந்த வகையான செயல்பாடுகளை மேற்கொள்ள எந்த தயக்கமும் காட்டாமல் முழுமுனைப்புடன் செயல்படுவதும் தான்.


அந்த வகையில் சமீப காலத்தில் சமூகத்தை பீடித்துள்ள சொல்லாடல் “தௌஹீத் – ஷிர்க்” மற்றும். “சுன்னாஹ் – பித்அத்”. இஸ்லாம் கூறும் முழுமையான பரந்துவிரிந்த தௌஹீதையும் சுன்னாவையும் விட்டுவிட்டு தங்களுக்கு ஆதாயம் தரக்கூடியவைகளை மட்டும் மக்களிடையே சித்தாந்தங்களாக பரப்புவதும், அதனடிப்படையில் தர்கங்கள் முதல் தாக்குதல்கள் வரை சமீபத்தில் நிகழ்த்தப்பட்டு சமூகத்தில் விரிசல்கள் மேலும் விரிவடைய வழிவகை செய்துள்ளனர்.


இந்த சூழலில் இறைவன் தனது தூதர்கள் மூலம் மனித குலத்திற்கு வழிகாட்டிய இஸ்லாமிய தௌஹீத் மற்றும் சுன்னாவினை விளக்கும் வகையில் நிகழ்த்தப்பட்ட தொடர் ஜுமுஅ சிறப்புரையின் முதல் பகுதி.

ஜுமுஅ சிறப்புரை @ மஸ்ஜிதுல் இஹ்ஸான், கோவை

நாள்: ஜனவரி 29, 2016

உரை: மௌலவி முஹம்மது இஸ்மாயில் இம்தாதி

இந்த உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்