மதுவும் முஸ்லிம் உம்மதின் கடமையும்..!!
3:28 AM
ஜுமுஅ உரைகள்
நம் தமிழ்நாட்டில் எங்கும் வியாபித்து அனைவரையும் அடிமைகளாய் சிந்தனை சிதைந்தவர்களாய் மற்றும் கொடிய அரக்கனாகிய மதுவை அரசே முன்னின்று நடத்திவரும் சூழலில். இன்று வெகு சிறுபான்மை முஸ்லிம்களும் அதன் கோரப்பிடியில் தங்களையும் அறியாமல் சிக்குண்டு கிடக்கிறார்கள்.
மதுவைக் குறித்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகையில் “மது தீமைகளின் தாய்” என்றார். அதனையே ஷைத்தானின் வழிகெடுக்கும் ஆயுதங்களான நான்கில் மது பிரதானமானது, எனவே அதிலிருந்து விளகியிருப்பவரே இறுதியில் வெற்றி பெற்றவர் என இறைவன் திருக்குர்ஆனில் கூறுவதையும் கொண்டு மனித குலம் மொத்தத்திற்கும் இம்மையிலும் மறுமையிலும் கேட்டினை விளைவிக்கக்கூடியது மது என்பதை உணரலாம்.
இத்தகைய சமூக பாதிப்பினை தடுத்து ஒட்டுமொத்த மக்களையும் நன்மையின் பால் அழைப்பதே முஸ்லிம் உம்மதின் தலையாய கடமை என்பதை விளக்கும் ஜுமுஅ சிறப்புரை.
ஜுமுஅ சிறப்புரை @ மஸ்ஜிதுல் இஹ்ஸான், கோவை
நாள்: அக்டோபர் 9, 2015
உரை: மௌலவி முஹம்மது இஸ்மாயில் இம்தாதி
இந்த உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்
சீர்திருத்தமும் நன்மையை ஏவுதலும்-100215..!!
8:11 PM
ஜுமுஅ உரைகள்
"மேலும் அவர்கள் எப்படிப்பட்டவர்களெனில், தம் இறைவனின் உவப்பை நாடி பொறுமையைக் கைக்கொள்கிறார்கள்; தொழுகையை நிலைநாட்டுகிறார்கள்; அவர்களுக்கு நாம் வழங்கியவற்றிலிருந்து மறைவாகவும் வெளிப்படையாகவும் செலவு செய்கின்றார்கள். மேலும், தீமையை நன்மையைக் கொண்டு களைகின்றார்கள். மறுமையின் நல்ல முடிவு இவர்களுக்கே உரித்தானது." -- அல்-குர்ஆன் (13:22)
நம் நாட்டில் இன்றைய சமூக சூழல் நாளுக்கு நாள் மோசமாகிக்கொண்டிருக்கிறது. சமூகத்தில் ஒழுக்க வீழ்ச்சியும், தீமைகள் தளைத்தோங்கிக்கொண்டும் இருக்கிறது. இந்த சமூக சுனாமியில் மிகவும் பாதிப்பிற்க்குள்ளவது பெண்களும் நம் இளைய சமூகமும் தான். இன்றைய பெண்கள் மற்றும் இளையதலைமுறையினரிடம் போதையும் ஒழுக்ககேடுகளும் பண்பாடு என்ற ரீதியில் பரப்பப்பட்டு அதில் அவர்கள் முழுவதுமாக தங்களை தொலைத்துக்கொள்கிறார்கள்.
உள்ளத்தை இறைவனுக்கு அற்பணிக்கும் தன்மையை உணர்த்தும் தியாகத் திருநாள்..!!
11:27 PM
கோவை மாநகர ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் சார்பாக தியாகத் திருநாள் சிறப்பு தொழுகை, கோவை கரும்புக்கடை இஸ்லாமியா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் இன்று (செப்டம்பர் 24, 2015) 7.30 மணியளவில் நடைபெற்றது.
இந்த சிறப்பு தொழுகையை கரும்புக்கடை மஸ்ஜிதுல் ஹுதா பள்ளியின் இமாம் அப்துல் கபூர் அவர்கள் வழிநடத்தினார்.
கரும்புக்கடை ஹிதாயா பெண்கள் கல்லூரியின் தாளாளரும் ,மஸ்ஜிதுல் இஹ்ஸான் பள்ளியின் இமாமுமான, மௌலவி முஹம்மது இஸ்மாயில் இம்தாதி அவர்கள் சிறப்புரையாற்றினார்.
அவர் தனது உரையில், பெருநாளை கொண்டாடும் ஒவ்வொருவரும் தங்கள் உள்ளத்தில் குடும்பம், குலம், இனம், மொழி, பண்பாட்டு மாச்சரியங்களால் கட்டுண்டு கிடப்பதை விடுத்து தங்கள் உள்ளத்தினை முழுவதுமாகவும் தனது மனயிச்சையை விட இறைவனின் திருப்பொருத்தத்தை பெறுவதே தனது முழுமுதல் நோக்காமாகவும், தனது வாழ்வில் நிகழும் அனைத்து நிகழ்வுகளையும் அவனது கட்டளைக்கினங்கவே முன்னெடுக்கும் உளப்பூர்வமான வழிபாடுகளின் மூலம் நமது அந்தஸ்தினை இறைவன் உயர்த்துவான். எனவே, நபி இப்ராஹிம் அவர்களும் அவர்களது குடும்பத்தார் செய்த உன்னத தியாகத்தை நினவுகூருவதர்க்காக இன்றைய தியாகத் திருநாளைக் கொண்டாடும் அனைவரும் தங்களது வாழ்நாள் முழுவதும் இறைவன் வழங்கிய வாழ்வியல் நெறியினை பின்பற்றி தங்களது வாழ்க்கையினையும் அமைத்துக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.
மேலும், நம் இந்தியத் திருநாட்டிலும் மற்றும் உலகெங்கிலும் போர் மற்றும் கலவரங்களினாலும், பல்வேறு நாடுகளில் அகதிகளாக புலம்பெயரும் ரோஹிங்கியா, சிரியா, பாலஸ்தீன முஸ்லிம்களுக்கும் அவர்களைப்போலவே துயரத்தில் வாடும் மக்களின் துயர் நீங்க வேண்டியும், உலக மக்கள் போர் பயமின்றி நிம்மதியுடனும் ஒற்றுமையுடனும் வாழவும் பிரார்த்தனை மேற்கொள்ளப்பட்டது.
இந்த பெருநாள் தொழுகை நிகழ்வில் ஆண்கள் - பெண்கள் உட்பட பத்தாயிரத்திற்கும் அதிகமான முஸ்லிம்கள் கலந்துகொண்டனர்.

பெண்ணுரிமையும் அவர்களது சமூகக் கடமையும்..!!
7:25 AM
ஜுமுஅ உரைகள்
(ஜைனப் அல்-கஸ்ஸாலி)
சமூக கட்டமைப்பில் மகளிரின் பங்கும் உரிமைகளும்..!!
1:45 PM
ஜுமுஅ உரைகள்
நாகரீகம் மற்றும் மனித சுதந்திரம் என்ற பெயரில் பெண்களை கண்காட்சி பொருளாக சித்தரிக்கும் மேற்க்கத்திய சித்தாந்தமும், பெண்கள் வீட்டை விட்டு வெளியில் சென்றால் பல குழப்பங்கள் உண்டாகும் அதனால் அவர்கள் வீட்டில் அடைபட்டுக்கிடப்பதே நல்லது என்றும் இருவேறு தீவிரப்போக்கு உலகளாவிய மக்களிடையே பரவலாக்கப்பட்டுள்ள இந்த குழப்பமான சூழலில் உண்மையில் பெண்களுக்கான சமூக அந்தஸ்து என்ன? சிறந்த சமூகத்தை கட்டியமைக்க அவர்களுடைய பங்கு எத்தகையது? அந்த சமூகத்தில் அவர்களது உரிமைகள் யாவை?
முஸ்லிம் சமூகத்தின் அவலநிலை மாற..!!
7:25 AM
ஜுமுஅ உரைகள்
சென்ற வார ஜூமுஅ சிறப்புரை இந்திய முஸ்லிம் சமூகம் அரசியல்வாதிகளாலும், தங்களது சமுதாயத் தலைவர்களின் குறுகிய லாபத்திற்க்கும் பலியாகி, திக்குத்தெரியாது தவிக்கும் நிலயைக்குறித்து விளக்கியது. இந்த நிலை மாற, முஸ்லிம் சமூகமும் அதன் தலைவர்களும் மேற்கொள்ளவேண்டிய பத்து உடனடி கட்டளைகளும் குறிப்பிடப்பட்டது.
அதில் முக்கியமான ஒன்று முஸ்லிம் சமூகம் தங்களுக்குள் உள்ள சின்னச்சின்ன கருத்துவேறுபாடுகளைக் கொண்டு மேலும் சமூகத்தில் பிளவை விரிவுபடுத்தாமல், தங்களுக்குள் கருத்தொருமிக்கும் களங்களில் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்பதாகும்.
எல்லாவகையிலும் இன்று ஒடுக்கப்பட்ட சமூகமாக இருக்கும் முஸ்லிம் சமூகத் தலைவர்களும் மக்களும் கண்டிப்பாக மேற்கொள்ளவேண்டிய கட்டளைகளில் சென்ற வாரம் விளக்கியதுபோக மீதமுள்ள ஆறு கட்டளைகளை விளக்கும் தொடர் உரையின் இரண்டாம் பகுதி.
ஜுமுஅ சிறப்புரை @ மஸ்ஜிதுல் இஹ்ஸான், கோவை
நாள்: ஆகஸ்ட் 21, 2015
உரை: மௌலவி முஹம்மது இஸ்மாயில் இம்தாதி
இந்த உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்
அதில் முக்கியமான ஒன்று முஸ்லிம் சமூகம் தங்களுக்குள் உள்ள சின்னச்சின்ன கருத்துவேறுபாடுகளைக் கொண்டு மேலும் சமூகத்தில் பிளவை விரிவுபடுத்தாமல், தங்களுக்குள் கருத்தொருமிக்கும் களங்களில் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்பதாகும்.
எல்லாவகையிலும் இன்று ஒடுக்கப்பட்ட சமூகமாக இருக்கும் முஸ்லிம் சமூகத் தலைவர்களும் மக்களும் கண்டிப்பாக மேற்கொள்ளவேண்டிய கட்டளைகளில் சென்ற வாரம் விளக்கியதுபோக மீதமுள்ள ஆறு கட்டளைகளை விளக்கும் தொடர் உரையின் இரண்டாம் பகுதி.
ஜுமுஅ சிறப்புரை @ மஸ்ஜிதுல் இஹ்ஸான், கோவை
நாள்: ஆகஸ்ட் 21, 2015
உரை: மௌலவி முஹம்மது இஸ்மாயில் இம்தாதி
இந்த உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்
Subscribe to:
Posts (Atom)