Masjidhul Ihsaan - Coimbatore

இறைவனின் பக்கம் மீளுதல்..!!


மஸ்ஜிதுல் இஹ்ஷானில் 2016-ஆம் ஆண்டின் ரமளான் மாதத்தின் மூன்றாவது தராவீஹ் தொழுகைக்குப்பின் நிகழ்த்தப்பட்ட சிறப்புரை.

தலைப்பு: இறைவனின் பக்கம் மீளுதல்

நாள்: ஜூன் 8, 2016

உரை:  சகோதரர். M. சலீம் (செயலாளர், ஜமாஅதே இஸ்லாமி ஹிந்த்)

இந்த உரையை கேட்க்க/YouTube-ல் பார்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்

https://drive.google.com/open?id=0B7o0wyRQOYOeUm8tSng2b0RYaGs

தர்மமும் வழிபாடே..!!


மஸ்ஜிதுல் இஹ்ஷானில் 2016-ஆம் ஆண்டின் ரமளான் மாதத்தின் இரண்டாவது தராவீஹ் தொழுகைக்குப்பின் நிகழ்த்தப்பட்ட சிறப்புரை.

தலைப்பு: தர்மமும் வழிபாடே

நாள்: ஜூன் 7, 2016

உரை:  மௌலவி முஹம்மது இஸ்மாயில் இம்தாதி

இந்த உரையை கேட்க்க/YouTube-ல் பார்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்

https://drive.google.com/open?id=0B7o0wyRQOYOeaGtnTkpuMjNBUU0


இரு கடமைகள்..!!


இறையடியான் தனது வாழ்நாளில் செய்யும் எல்லா செயல்களையும் இஸ்லாமிய ஷரியத் இரண்டு விதமான கடமைகளாக வகுப்பதை நாம் ஆழமாக சிந்தித்தால் விளங்கிக்கொள்ள முடியும். ஒன்று, இறைவனுக்கு செய்யவேண்டிய கடமை இன்னொன்று இறைவனின் படைபுக்குச் செய்யவேண்டிய கடமை.

இறைவனின் படைபுகளுக்குச் செய்யவேண்டிய கடமைகளில் தலையாயதும் சமூகக் கடமையுமான தான தர்மங்கள் வழங்குவதன் சிறப்பையும். அவ்வாறு செய்யப்படும் தானம் ஓர் குறிப்பிட்ட காலத்தில் அல்லாமல் மனிதன் இறப்பு வரையிலும் தொடர்ந்து செய்யவேண்டிய ஒன்று என்பதையும் அதன் இன்றியமையாத தன்மையையும் விளக்கும் ஜுமுஆ சிறப்புரை.

ஜுமுஅ சிறப்புரை @ மஸ்ஜிதுல் இஹ்ஸான், கோவை

நாள்: ஜூன் 10, 2016

உரை: மௌலவி முஹம்மது இஸ்மாயில் இம்தாதி

இந்த உரையை கேட்க்க பார்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்



நோன்பின் இலக்கு எது..?


மனிதனை இறைவனுக்கு மிக அருகில் கொண்டுசெல்ல வல்லதும் அவனது அருளையும் கருணையும் பெற்றுத்தரும் ரமளான் மாதம் நம்மை வந்தடையவிருக்கும் நேரத்தில், அந்த மாதம் முழுவதும் நோர்க்கப்படும் நோன்பின் வாயிலாக மனிதன் இறுதியாக எதனை பெறுகிறான் என்று சிந்தித்தால், அது அவன் ரமளான் அல்லாத மற்ற மாதங்களில் இறையச்சம் என்ற நற்குணத்தை பெறுவதே இந்த மாதத்தின் நோக்கமாக இருக்கிறது. அந்த குணத்தின் மூலமே இறைவனின் அருளையும் பாவமன்னிப்பும் பெறமுடியும்.

ரமளான் நோன்பின் மூலம் ஓர் இறையடியானின் வாழ்வில் மற்றும் சமூகத்தில் நிகழவேண்டிய மாற்றங்கள் மற்றும் நோன்பின் மூலம் எவ்வாறு இறையச்சம் எனும் மனிதனை பெரும் தீமைகளிலிருந்து காக்கும் கேடயத்தை புதுப்பிக்கும் பயிற்சின் மூலம் மனிதன் எவ்வாறு ஈருலகிலும் வெற்றி பெறமுடியும் என்பதனை விளக்கும் ஜுமுஆ சிறப்புரை..

நாள்: ஜூன் 2, 2016

உரை: மௌலவி முஹம்மது இஸ்மாயில் இம்தாதி

இந்த உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்.



ரமளானே வருக..!! (Video)


ரமளான் மாதம் நம்மை விரைவில் வந்தடையவிருக்கும் நேரத்தில் ரமளான் மாதத்தை எவ்வாறு ஓர் இறையடியான் வரவேற்க்கும் விதாமாக கோவை கரும்புக்கடையிலுள்ள மஸ்ஜிதுல் இஹ்ஸானில் “ரமளானே வருக” எனும் தலைப்பில் சிறப்பு நிகழ்ச்சி கடந்த ஞாயிறு மாலை 5:30 மணி முதல் இரவு 8 மணிவரை நடைபெற்றது.

இந்நிகழ்வில், ரமளான் நோன்பின் மூலம் ஓர் இறையடியானின் வாழ்வில் மற்றும் சமூகத்தில் நிகழவேண்டிய மாற்றங்கள் மற்றும் ரமளான் எவ்வாறு அவரது ஈருலக வெற்றிக்கு அந்த மனிதனை தயார்படுத்துகிறது என்பதனையும், எவ்வாறு அவர் இந்த ரமளானை வரவேற்க முனையவேண்டும் என்பதனை விளக்கும் சிறப்புரை..

நாள்: மே 29, 2016

உரை: மௌலவி முஹம்மது இஸ்மாயில் இம்தாதி

ரமளானே வருக..!!


ரமளான் மாதம் நம்மை விரைவில் வந்தடையவிருக்கும் நேரத்தில் ரமளான் மாதத்தை எவ்வாறு ஓர் இறையடியான் வரவேற்க்கும் விதாமாக கோவை கரும்புக்கடையிலுள்ள மஸ்ஜிதுல் இஹ்ஸானில் “ரமளானே வருக” எனும் தலைப்பில் சிறப்பு நிகழ்ச்சி கடந்த ஞாயிறு மாலை 5:30 மணி முதல் இரவு 8 மணிவரை நடைபெற்றது.

இந்நிகழ்வில், ரமளான் நோன்பின் மூலம் ஓர் இறையடியானின் வாழ்வில் மற்றும் சமூகத்தில் நிகழவேண்டிய மாற்றங்கள் மற்றும் ரமளான் எவ்வாறு அவரது ஈருலக வெற்றிக்கு அந்த மனிதனை தயார்படுத்துகிறது என்பதனையும், எவ்வாறு அவர் இந்த ரமளானை வரவேற்க முனையவேண்டும் என்பதனை விளக்கும் சிறப்புரை..

நாள்: மே 29, 2016

உரை: மௌலவி முஹம்மது இஸ்மாயில் இம்தாதி

இந்த உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்.



நோயும் நிவாரணமும்..!! (Video)

மனிதனது வாழ்நாளில் அவனை பாதிக்கும் நோய்களின் தாக்கமும் அதன் நிவாரணம் குறித்த இஸ்லாமியக் கண்ணோட்டம் குறித்த ஜுமுஆ சிறப்புரைகளின் தொகுப்பு.

நாள்: மே 6, 2016

உரை: மௌலவி முஹம்மது இஸ்மாயில் இம்தாதி

இந்த உரையை கானொளியில் காண (YouTube) கீழுள்ள லிங்கினை சொடுக்கவும்:


நோயும் நிவாரணமும்- Part 1 & 2



மனிதனது வாழ்நாளில் அவனை பாதிக்கும் நோய்களின் தாக்கமும் அதன் நிவாரணம் குறித்த இஸ்லாமியக் கண்ணோட்டம் குறித்த ஜுமுஆ சிறப்புரைகளின் தொகுப்பு.

நாள்: ஏப்ரல் 29, 2016 & மே 6, 2016

உரை: மௌலவி முஹம்மது இஸ்மாயில் இம்தாதி

இந்த உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்..

Part – 1
https://drive.google.com/file/d/0B7o0wyRQOYOeT3htT0NEM2g4ajg/view?usp=sharing

http://yourlisten.com/jihkovai/042916-part-1

Part - 2 
https://drive.google.com/file/d/0B7o0wyRQOYOeZTBjcEthQ3EwX1k/view?usp=sharing

http://yourlisten.com/jihkovai/050616-part-2








இஸ்லாமும் அரசியல் நெறியும்..!!


“அவனுக்கு அதிகாரம் கிடைத்து விட்டால், அவனுடைய முயற்சிகள் எல்லாம் பூமியில் குழப்பத்தைப் பரப்புவதற்காகவும் வேளாண்மையையும், மனித இனத்தையும் அழிப்பதற்காகவுமே இருக்கும்! ஆனால் (அவன் சாட்சியாக்குகின்ற) அல்லாஹ் குழப்பத்தை விரும்புவதில்லை.”
                                                         - அல்-குர்ஆன் (2:205)

இந்த இறைவசனம் தற்போதைய ஆட்சியாளர்களின் செயல்பாட்டை ஒத்து இருப்பதை காணும்போது நம்பிக்கையாளர்களாக சமூகத்தில் நிலவும் அநீதிகளை எதிர்ப்பதும் உலகில் நீதியை நிலைநாட்ட பாடுபடுவதும் ஒவ்வோர் முஸ்லிமின் கடமை என்பதை உணரமுடிகிறது.

அதன் வழியில் இஸ்லாமிய மார்க்கம் ஆட்சி-அதிகாரம் குறித்து எவ்வாறான வழிமுறையை ஒட்டுமொத்த மனித சமூகத்திற்கும் வழங்கியுள்ளது என்பதை விளக்கும் ஜுமுஅ சிறப்புரை.

ஜுமுஅ சிறப்புரை @ மஸ்ஜிதுல் இஹ்ஸான், கோவை

நாள்: மார்ச் 18, 2016

உரை: மௌலவி முஹம்மது இஸ்மாயில் இம்தாதி

இந்த உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்




இறைதிருப்தியடைந்த ஆன்மா..!!



சராசரியாக சுமார் 60 ஆண்டுகள் இந்த உலகில் கழிக்கும் மனிதன், தனக்கு வழங்கப்பட்ட இந்த வாழ்நாளில் உலகியல் நலனுக்காக தனது உழைப்பையும் திறன் முழுவதையும் பிரயோக்கித்து கடைசியில் நிராசயுடனும் மனம் திருப்தியற்ற நிலையிலும் வாழ்வின் கடைசி காலங்களை கழிப்பதை காண்கிறோம்.

சமூகமும் அறிஞர்களின் நிலையும்..!!


இந்தியாவில் அதுவும் குறிப்பாக தமிழகத்தில் இஸ்லாமிய சமூகம் எவ்வாறான கருத்தோட்டங்களையும் செயல்பாடுகளையும் மேற்கொண்டுள்ளது என்பதை ஆராய்ந்தால், அது இந்த சமூகத்தில் விரிசல்களை பிளவுகளாக மாற்றவும் மேலும் பல்வேறான கருத்துவேறுபாடுகளை முன்னெடுக்கவுமே வழிவகுத்துள்ளது.