Masjidhul Ihsaan - Coimbatore

இஸ்லாமிய அரசாட்சியின் முன்னுதாரணம்..!!


இன்றைய நாவீனகால அரசியல் சூழலிலும் மாற்றுக்கருத்து கொண்டுள்ளவர்களும் எதிர்பார்த்து இருக்கும் உதாரண அரசாட்சி ஹள்ரத் உமர் (ரலி) அவர்களின் ஆட்சியே.

இஸ்லாமிய ஆட்சிமுறையின் பிரதிபலிப்பாகவும் அகிலத்தின் ஆட்சியாளர்கள் அனைவருக்கும் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கிய மக்கள் நலம் பேணும், நீதியை நிலைநிறுத்தும், உரிமைகளை பாதுகாக்கும், மத சுதந்திரம் போற்றும் ஆட்சியினை பறந்து விரிந்து கிடந்த நிலப்பரப்பு முழுவதும் வழங்கியவர் ஹள்ரத் உமர் (ரலி) அவர்கள்.

ஹள்ரத் உமர் (ரலி) அவர்களது ஆட்சியினை எடுத்திக்காட்டாக கொண்டு இன்றைய முஸ்லிம்களின் அரசியல் குறிக்கோள் மற்றும் இஸ்லாமிய ஆட்சிமுறையை நிலைநிறுத்த வேண்டிய இன்றியமையாமையையும் விளக்கும் ஜுமுஅ சிறப்புரை.

ஜுமுஅ சிறப்புரை @ மஸ்ஜிதுல் இஹ்ஸான், கோவை

நாள்: ஜனவரி 15, 2016

உரை: மௌலவி முஹம்மது இஸ்மாயில் இம்தாதி

இந்த உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்



அரசாட்சி எனும் இறைகட்டளை.!!


“திண்ணமாகத் தனக்கு உதவி செய்வோருக்கு அல்லாஹ் உதவி செய்வான். நிச்சயம் அல்லாஹ் வலிமை வாய்ந்தவனும் யாவற்றையும் மிகைத்தவனுமாவான். அவர்கள் எத்தகையவர்களெனில், நாம் அவர்களுக்கு பூமியில் ஆட்சியதிகாரத்தை வழங்கினால் அவர்கள் தொழுகையை நிலை நிறுத்துவார்கள்; ஜகாத் வழங்குவார்கள். மேலும், நன்மை புரியுமாறு ஏவுவார்கள்; தீமையிலிருந்து தடுப்பார்கள். மேலும், எல்லா விவகாரங்களின் முடிவும் அல்லாஹ்வின் கையில் உள்ளது.” – அல் குர்ஆன் (22:40-41)

மேலுள்ள இறைவசனங்கள் இறை நம்பிக்கயாளர்களுக்கு ஆட்சியதிகாரம் வழங்கப்படும்போது அவர்கள் எவ்வாறான செயல்களை செய்வார்கள் என்பதனை எடுத்துரைக்கிறது. இறையடியார்களிடம் பொறுப்பு சாட்டப்ப்படும்போது அவர்களது செயல் இறைவனையும் அவனது வழிகாட்டலின்படியும் அமைந்திருக்கும் என்பதையும் விளக்கும் ஜுமுஅ சிறப்புரை.

ஜுமுஅ சிறப்புரை @ மஸ்ஜிதுல் இஹ்ஸான், கோவை

நாள்: ஜனவரி 8, 2016

உரை: மௌலவி முஹம்மது இஸ்மாயில் இம்தாதி

இந்த உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்



இந்திய முஸ்லிம்களின் கொள்கைப்பிடிப்பு..!!


فَاُلۡقِىَ السَّحَرَةُ سُجَّدًا قَالُوۡۤا اٰمَنَّا بِرَبِّ هٰرُوۡنَ وَمُوۡسٰى  ﴿20:70﴾ قَالَ اٰمَنۡتُمۡ لَهٗ قَبۡلَ اَنۡ اٰذَنَ لَـكُمۡؕ اِنَّهٗ لَـكَبِيۡرُكُمُ الَّذِىۡ عَلَّمَكُمُ السِّحۡرَۚ فَلَاُقَطِّعَنَّ اَيۡدِيَكُمۡ وَاَرۡجُلَكُمۡ مِّنۡ خِلَافٍ وَّلَاُصَلِّبَـنَّكُمۡ فِىۡ جُذُوۡعِ النَّخۡلِ وَلَـتَعۡلَمُنَّ اَيُّنَاۤ اَشَدُّ عَذَابًا وَّاَبۡقٰى ﴿20:71﴾ قَالُوۡا لَنۡ نُّؤۡثِرَكَ عَلٰى مَا جَآءَنَا مِنَ الۡبَيِّنٰتِ وَالَّذِىۡ فَطَرَنَا فَاقۡضِ مَاۤ اَنۡتَ قَاضٍ ؕ اِنَّمَا تَقۡضِىۡ هٰذِهِ الۡحَيٰوةَ الدُّنۡيَا ؕ ﴿20:72﴾ اِنَّاۤ اٰمَنَّا بِرَبِّنَا لِيَـغۡفِرَ لَـنَا خَطٰيٰنَا وَمَاۤ اَكۡرَهۡتَـنَا عَلَيۡهِ مِنَ السِّحۡرِؕ وَاللّٰهُ خَيۡرٌ وَّاَبۡقٰى

வலதுசாரி ஹிந்துத்துவ சிந்தனை கொண்ட பாசிஸ்ட்கள் ஆட்சிக்கட்டிலில் அமர்த்தப்பட்டதிலிருது நம் நாட்டின் மதச்சார்பற்ற கொள்கைகள் காற்றில்விடப்பட்டு சிறுபான்மை மதத்தவர் மட்டுமில்லாமல், தலித்துகள், மற்றும் பிற்படுத்தப்பட்டோர் மீது அடக்குமுறைகளும் கொலைவெறித்தாக்குதல்களும் நாள்தோறும் அரங்கேறிக்கொண்டிருக்கிறது.

நேசமும் விவேகமும்..!!


ஒவ்வோர் ஆண்டு ரபிய்யுல் அவ்வல் மாதம்மும் நம் சமூகத்தில் நபிகளார் (ஸல்) அவர்கள்மீதான நேசம் என்ற பெயரில் புகழ்பாக்கள் பாடுவதும், திக்ருகளும், கந்தூரி நிகழ்ச்சிகளும் நடைபெறுவது வழக்கம்.

முஸ்லிம்களின் தலையாய பணி எது ?




இறைவன் மனிதனை படைத்து அவனுக்கு நேரிய வழிகாட்டுதல்களை வழங்கி, இறுதியில் சுவனத்திற்கு தகுந்தவனாக மாற்றிடும் ஓர் தேர்வுக்கான இடமாக இந்த உலகினை ஏற்படுத்தியுள்ளான்.

அழைப்புப்பணியின் அவசியம்.!!


இந்திய மற்றும் உலகம் முழுவதிலும் நிகழும் பல்வேறு வன்முறை சம்பவங்கள் மற்றும் அதனையொட்டி எல்லோராலும் இஸ்லாமிய சமூகம் புறக்கணிக்கப்பட்டும் பழிக்கப்படும் வருகிறது.

சமூக சேவை ஏற்படுத்திய தாக்கங்கள்..!!


தமிழகத்தின் தலைநகர் சிங்காரச் சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற மாவட்டங்கள் சமீபத்திய பெருமழையினால் தத்தளித்து வருகிறது. இந்த தருணத்தில் முஸ்லிம் அமைப்புகள் மத, ஜாதி, மொழி என்ற எந்த பாகுபாடின்றி இரவு பகல் பாராமல் மீட்ப்புப்பணியிலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, குடிநீர், மற்றும் பால் போன்ற அத்தியாவிசய பொருட்களை வழங்குவதிலும் முழு முனைப்புடன் செயல்பட்டு வருகின்றனர்.



இந்த மனிதநேய செயல்பாட்டால் பெருமளவு முஸ்லிம்கள் மீது ஊடகங்கள் மற்றும் பிரிவினைவாத சக்திகளினால் ஏற்படுத்தப்பட்ட பிம்பம் பாதிக்கப்பட்ட மக்களின் மனதிலிருந்து அகன்று முஸ்லிம்களை சகோதர வாஞ்சையுடன் பார்க்கும் சூழல் உருவாகியிருக்கிறது.

மனிதநேயம் கொண்ட தொண்டின் மூலமே மனிதகுலத்திற்கு இறைவன் காட்டித்தந்த இந்த மார்க்கத்தின் அவசியத்தை பிறருக்கு புரியும்படி எடுத்துவைக்க முடியும் என்பதனையே இந்த சம்பவம் நமக்கு உணர்த்தியிருக்கிறது. எவ்வித பேதமின்றி சுயநலம் பாராத சமூக சேவையின் மூலமே இஸ்லாமிய மாண்புகளை பிறமக்களுக்கு முன் சிறப்பாக அறிமுகப்படுத்திட முடியும் என்பதனை விளக்கும் ஜுமுஅ சிறப்புரை.

ஜுமுஅ சிறப்புரை @ மஸ்ஜிதுல் இஹ்ஸான், கோவை

நாள்: டிசம்பர் 4, 2015

உரை: மௌலவி முஹம்மது இஸ்மாயில் இம்தாதி

இந்த உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்


முஸ்லிம்கள் தாங்க வேண்டிய ஆயுதம் எது ?


இந்திய தேசம் முழுவதும் மத அடிப்படையிலான முஸ்லிம்களுக்கு எதிரான துவேஷக் கருத்துகள் பரவலாக்கப்பட்டு வரும் இந்த காலகட்டத்தில், முஸ்லிம்கள் எவ்வாறான நடவடிக்கைகள் மற்றும் அவர்களின் செயல்பாடு எதனை பிரதிபலிப்பதாக அமைய வேண்டும் என்பதனை விளக்கும் ஜுமுஅ சிறப்புரை.

ஜுமுஅ சிறப்புரை @ மஸ்ஜிதுல் இஹ்ஸான், கோவை

நாள்: நவம்பர் 27, 2015

உரை: மௌலவி முஹம்மது இஸ்மாயில் இம்தாதி

இந்த உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்


அரசியல் அனாதைகள் பட்டம் ஏன் ?


 اَفَمَنۡ اَسَّسَ بُنۡيَانَهٗ عَلٰى تَقۡوٰى مِنَ اللّٰهِ وَرِضۡوَانٍ خَيۡرٌ اَمۡ مَّنۡ اَسَّسَ بُنۡيَانَهٗ عَلٰى شَفَا جُرُفٍ هَارٍ فَانۡهَارَ بِهٖ فِىۡ نَارِ جَهَـنَّمَؕ وَاللّٰهُ لَا يَهۡدِى الۡقَوۡمَ الظّٰلِمِيۡنَ ﴿9:109﴾ لَا يَزَالُ بُنۡيَانُهُمُ الَّذِىۡ بَنَوۡا رِيۡبَةً فِىۡ قُلُوۡبِهِمۡ اِلَّاۤ اَنۡ تَقَطَّعَ قُلُوۡبُهُمۡؕ وَاللّٰهُ عَلِيۡمٌ حَكِيۡمٌ ﴿9:110﴾

முஸ்லிமின் முதல் பொறுப்பு தஃவா.!!


ஓர் முஸ்லிம் குடும்பத்தில் பிறந்ததனால் மட்டும் ஓர் மனிதன் தன்னை முஸ்லிம் என்று அடையாளப்படுத்திக் கொள்ளமுடியாது. அதனைத்தாண்டி, அவனது அணைத்து செயல்பாடுகளும் இந்த அகில உலகினையும் படைத்து பரிபாலிக்கும் இறைவனின் கட்டளைகளுக்கிணங்க கீழ்படியும்போதே அவனை முஸ்லிம் என்று இறைவன் தனது திருமறையில் குறிப்பிடுகிறான்.

இறையாட்சி- ஓர் பார்வை..!!


இந்த உலகில் மனிதனை படைத்து அவனுக்கு தேவையான அனைத்தும் படைத்த இறைவன் அவனுக்கு நல்வழிகாட்ட நபிமார்களையும் அனுப்பிவைத்தான். இதன் நோக்கம் மனிதன் தன்னை படைத்தவனை உணர்ந்து அவனது கட்டளைகளுக்கு முழுதும் கீழ்படிந்து நடப்பதற்க்கே.